குமரவேலுவை வெளுத்து விட்ட பாண்டியனின் வாரிசுகள்.. சக்திவேலுவின் சதியை கண்டுபிடித்த பழனிவேலு, திருந்தாத சுகன்யா

pandian Stores 2 (52)
pandian Stores 2 (52)

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தேர்ந்தெடுத்த பையன் சரியில்லாதவன், இந்த வயசில் தேவையில்லாத காதல், பொய் சொல்லி ஏமாற்றிய மகள், செய்த திருட்டு வேலைகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத கோமதி அழுது புலம்பி அம்மா வேதனையை கொட்டும் அளவிற்கு நடிப்பால் மிரட்டி விட்டார்.

பாண்டியன் இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே மௌனம் ஆகிவிட்டார். நினைச்சு நினைச்சு பீல் பண்ணும் அளவிற்கு கோமதி, அரசி செய்த வேலையை நினைத்து வருத்தம் அடைந்து உண்மையிலேயே ஒரு குடும்பத்தில் மகள் இந்த மாதிரி வேலைகளை செய்தால் அம்மாவின் வேதனை எப்படி இருக்கும் என்பதை கண்முன் காட்டும் விதமாக கோமதியின் நடிப்பு மிரள வைத்து விட்டது.

இன்னொரு பக்கம் தான் தூக்கி வளர்த்த அக்கா பொண்ணு இப்படி ஒரு தவறு பண்ணுவதற்கு குமரவேலு தான் காரணம் என்று கோபப்பட்ட பழனிவேலு நேரடியாக அண்ணன் வீட்டிற்கு சென்று குமரவேலுமிடம் சண்டை போடுகிறார். உடனே சக்திவேல், என்னுடைய பையன் மோசமானவனாக இருந்தாலும் உங்க வீட்டு பொண்ணு என்ன பச்சைக் குழந்தையா? ஏன் அவனை நம்பி படத்துக்கு போகணும்.

அப்படி என்றால் உங்க வீட்டு பொண்ணுக்கும் என் பையன் மீது காதல் இருக்கு தானே என்று சொல்லி விதண்டாவாதம் பேச ஆரம்பிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த செந்தில் மற்றும் கதிர் குமரவேலுவை வெளுத்து வாங்கும் அளவிற்கு அடித்து விட்டார். உடனே சக்திவேல் உங்க குடும்பத்தை பழி வாங்குவதற்காக தான் என் மகன் இப்படி பண்ணினான் என்று உண்மையை போட்டு உடைக்கிறார்.

இதை கேள்விப்பட்டதும் பழனிவேலு அப்படியே நொறுங்கிப் போய்விட்டார், எங்க மேல கோபம் இருக்கு சண்டை போடணும் என்றால் நேருக்கு நேர் மோதணும். அதை விட்டுவிட்டு சின்ன பொண்ணு மனசில் இப்படி ஒரு நஞ்சை பதித்து விட்டீர்கள் என்று பழனிவேலு தன் தூக்கி வளர்த்த அக்கா மகள் மீது பாசம் கொட்டும் விதமாக கோபத்தை காட்டி விட்டார்.

ஆனாலும் வீட்டிற்கு வந்து குமரவேலு மற்றும் சக்திவேலுவின் சதியை பற்றி செந்தில் கதிர் மற்றும் பழனிவேலு வாயை திறக்கவே இல்லை. கோமதி அழுது கொண்டே இருப்பதால் இந்த நேரத்தில் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அமைதியாகி விட்டார்கள். பிறகு அரசி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு கதறுகிறார். இந்த நேரத்திலும் கூட சுகன்யா குமரவேலுவை மட்டும் தவறு சொன்னால் எப்படி சரியாக இருக்கும்.

ரெண்டு கையும் தட்டினால் தான் ஓசை வரும் அதே மாதிரி ரெண்டு பேரும் ஆசைப்பட்டதால் தான் இந்த மாதிரி பண்ணி இருக்காங்க என்று வாய் கூசாமல் கோமதியை நோகடிக்கும் வகையில் பேசி விட்டார். உடனே கோமதி, வீட்டில் இருக்கும் நீயே இப்படி பேசினால் வெளியே இருப்பவர்கள் என்னெல்லாம் பேசுவாங்க என்று சொல்லி மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இந்த சுகன்யா இப்படியே இந்த பிரச்சினையை விட்டு விடமாட்டார், மறுபடியும் அரசிடம் பேசி குமரவேலுடன் திருட்டு கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவார்.

Advertisement Amazon Prime Banner