
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த திருட்டு காதலால் கோபத்துடன் இருந்த ஈஸ்வரி அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதனால் யாரிடமும் சொல்லாமல் கோபியிடம் மட்டும் விஷயத்தை சொல்லி மாப்பிளை குடும்பத்தார்களை வீட்டுக்கு வரவழைத்து இனியவை பார்த்துட்டு போக வைத்து விட்டார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாக்கியம் ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். அவளுக்கு இப்போ கல்யாண வயசு இல்லை, என் மகள் படித்து சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பிள்ளைகள் தெரியாமல் ஒரு சின்ன தவறு பண்ணிட்டாங்க என்றால் அவங்களுக்கு புரியும்படி நாம் எடுத்து சொல்லனுமே தவிர அவசர புத்தியால் எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது.
அதனால் பிள்ளைகள் வாழ்க்கை தான் வீணாகும், சும்மா நம்மளுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு கல்யாண வாழ்க்கையில் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. அதில் நான் மட்டுமே கஷ்டப்பட்டதாக இருந்துட்டு போகட்டும் என் மகளுக்கு அந்த நிலைமை வேண்டாம் என்று இனியாவின் வாழ்க்கைக்காக ஈஸ்வரிடம் போராடுகிறார்.
ஆனால் ஈஸ்வரி எதையும் காது கொடுத்து கேட்காமல் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்து விட்டார். அத்துடன் பாக்கியா சொல்வது சரிதான் என்பதற்கு ஏற்ப கோபியை தவிர மற்றவர்கள் அனைவரும் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக ஈஸ்வரிடம் பேசுகிறார்கள். ஆனால் ஈஸ்வரி ஒவ்வொருவரையும் பேச விடாமல் வாயடைத்து விடுகிறார்.
இருந்தாலும் பாக்கியா, என் மகள் விஷயத்தில் நான் தான் முடிவெடுக்க வேண்டும். அந்த உரிமை உங்களுக்கு இல்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார். ஆனால் இதற்கெல்லாம் அசராத ஈஸ்வரி, பாக்கிய சொல்வதை பொருட்படுத்தாமல் கோபியிடம் நிச்சயதார்த்த வேலைகளை பார்க்க சொல்கிறார்.
உடனே கோபி, இனியவை தனியாக கூப்பிட்டு ஈஸ்வரி ரூமுக்கு வர வைக்கிறார். ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் சேர்ந்து நீலிக்கண்ணீர் வடித்து செண்டிமெண்ட் ட்ராமா போட்டு இனியாவே பேச விடாமல் சம்மதம் தெரிவிக்கும் வகையில் நடித்து விடுகிறார்கள். அதிலும் ஈஸ்வரி பேசியதே காது கொடுத்து கூட கேட்க முடியவில்லை அந்த அளவிற்கு ஓவர் டிராமாவாக இருந்தது.
இதையெல்லாம் தாண்டி இனியாவிடம் பாக்யா சொன்னது என்னவென்றால் யார் என்ன சொன்னாலும் நீ காதில் வாங்கிக் கொள்ளாதே. உனக்கு இப்பொழுது படிப்பு தான் ரொம்ப முக்கியம் அதனால் ஒழுங்காக படித்து வெற்றி பெறு. உங்க பாட்டி சொன்னது எதுவும் நடக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இனியாவிற்கு சத்தியம் செய்து விடுகிறார்.