
Silk smitha: சில்க் ஸ்மிதா என்ற அழகு தேவதையின் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பம் என்னவானது என்பதை யாரும் யோசித்திருக்க மாட்டோம்.
சில்க் ஸ்மிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பது கூட இன்னமும் புலப்படாத உண்மை. இந்த நிலையில் சில்கின் மரணத்திற்கு யார் காரணம், அவருடைய மறைவுக்கு பின் நடந்தது என்ன என்பதை பற்றி அவருடைய உடன் பிறந்த தம்பி பேசி இருக்கிறார்.
சில்க்கின் தம்பி தன்னுடைய அக்காவின் மரணத்திற்கு அவருடைய பிஏ ராதாகிருஷ்ணன் தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார்.
சில்க்கின் தம்பி
மேலும் சில்க் தற்கொலை செய்யவில்லை, ராதாகிருஷ்ணன் தான் அவரை கொலை செய்து விட்டார் எனவும் சர்ச்சையாக சொல்லியிருக்கிறார். மேலும் சில்கின் மரணத்தின் போது 20 நாட்கள் அவருடைய குடும்பத்தினர் அந்த வீட்டில் தான் தங்கி இருந்திருக்கிறார்கள்.
ராதாகிருஷ்ணனுக்கு தமிழ் சினிமாவில் அதிக ஆட்கள் பலம் இருந்ததால் சில்கின் சொத்துக்களை சுருட்ட தான் அவருடைய குடும்பம் இந்த வீட்டில் இருப்பதாக கட்டுக்கதை கட்டி இருக்கிறார்.
இதை நம்பி தமிழ் சினிமா பிரமுகர்கள் பலரும் சில்கின் வீட்டிற்கு வந்து அவருடைய குடும்பத்தை அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
மொழி தெரியாமல், எந்த ஒரு ஆள் பலமும் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாகவும், இப்போது ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் கூட அவர் மீது வழக்கு தொடுப்போம் என்றும் அவருடைய தம்பி கூறியிருக்கிறார்.
மேலும் சில்க் ஸ்மிதா சேர்த்த சொத்துக்கள் மற்றும் அவருடைய வீடு அத்தனையையும் ராதாகிருஷ்ணன் தன்னுடைய பொறுப்பில் கொண்டு வந்து விட்டதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.