சூப்பர் ஸ்டார் கூலி படத்துக்கு வரும் தரமான போட்டி.. சிவகார்த்திகேயன் விட்ட ஜூட்

Coolie-madrasi
Coolie-madrasi

கூலி படம் கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. இவ்வளவு சீக்கிரம் இந்த படம் முடிந்ததற்கு காரணம் ரஜினிகாந்த் தான் என லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் கூறி வருகிறார். கொடுத்த கால் சீட்டுகளுக்கு ரஜினிகாந்த் பக்காவாக தன்னுடைய பங்கை முடித்து கொடுத்து விட்டாராம்.

அதுவும் போக நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களும் தங்களது கால் சீட்டுகளை சரியான முறையில் நேர்த்தியாக பயன்படுத்தியதால் இந்த படம் வெகுவிரைவாக முடிந்து விட்டது.

இந்த படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். இப்பொழுது இதற்கு போட்டியாக ஒரு தரமான படமும் வெளிவர இருக்கிறது. இதே நாளில் தான் சிவகார்த்திகேயனின் மதராசி படமும் திட்டமிட்டு வைத்திருந்தார்கள்.

இப்பொழுது ரஜினியின் கூலி படம் வருவதால் அவர்கள் அதற்கு முன்னால் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜூலை மாதத்திலேயே மதராசி படத்தை எதிர்பார்க்கலாம். ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகிறார்கள்.

இப்பொழுதுரஜினியின் கூலி படத்துடன் மோத போவது ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் வார் 2 படம் தாணாம். cஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் வெளிவந்து சக்கபோடு போட்டது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த அந்த படத்தில் ரித்திக் ரோஷன், டைகர் ஷரப் வாணி கபூர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

Advertisement Amazon Prime Banner