Pa Ranjith : சமூகத்தில் கீழ்த்தட்டு தளத்தில் இருக்கும் மக்களின் கதையை எடுப்பதில் கைதேர்ந்தவர் தான் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆர்யாவை வைத்து பா ரஞ்சித் இயக்கிய படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்தப் படம் கோவிட் காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் மிகப்பெரிய வரவேற்பையும் சார்பட்டா பரம்பரை பெற்றது.
இதைத்தொடர்ந்து தியேட்டர் வெளியீட்டிற்காக பிரமாண்ட பட்ஜெட்டில் சார்பட்டா பரம்பரை 2 படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இது பெரிய பட்ஜெட் என்பதால் பல நிறுவனங்கள் கூட்டாக இணைந்து படத்தை எடுத்தனர்.
ரஞ்சித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஏற்பட்ட மோதல்
அதில் சார்பட்டா பரம்பரை படத்தின் கதாநாயகன் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனம், நார்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ டிவி ஆகியவை இணைந்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது பட்ஜெட் இன்னும் அதிகமானது.
இதனால் ஜீ டிவி மற்றும் இயக்குனர் ரஞ்சித் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து ஜீ டிவி தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த மூன்று தயாரிப்பு நிறுவனத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டை போட இருந்த நிறுவனம் ஜீ டிவி. இப்போது அந்த நிறுவனம் வெளியேறி இருப்பதால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் சார்பட்டா பரம்பரை 2 படம் கைவிடும் நிலமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்யாவும் வேறு படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.