எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரனின் அடுத்த பிளான், சந்தோஷத்தில் சக்தி.. ஒன்னு சேர்ந்த கதிர் அரசி, நிற்கும் தர்ஷன் கல்யாணம்

ethirneechal (98)
ethirneechal (98)

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் கூட இந்த அளவுக்கு ஓவராக குதிக்கவில்லை. ஆனால் அல்ல கையாக இருக்கும் கதிர், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். தர்ஷன் மீது தான் தவறு இருக்கிறது அறிவுக்கரசி தான் பார்கவி வீட்டில் பிரச்சனை பண்ணினார் என்று தெரிந்தும் கதிர் எதுவுமே இல்லை என்பது போல் வாய்சவடால் விடுகிறார்.

ஆனாலும் குற்றவை, குணசேகரன் வீட்டிற்கு சென்று தர்ஷனை விசாரிக்க கூப்பிட்ட பொழுது கதிர் போலீஸ் என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதிலும் அறிவுக்கரசி, புத்தி கெட்டுப் போய் பார்கவியை அவமானப்படுத்தும் அளவிற்கு மோசமாக பேசினார். இதையெல்லாம் பார்த்த குற்றவை, தர்ஷனை இங்கிருந்து கூட்டிட்டு போகாமல் விடமாட்டேன் என்று மல்லு கட்டுகிறார்.

ஆனால் போலீஸ் வந்து விசாரணைக்கு கூப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணும் குடும்பம் என்றால் அது குணசேகரன் விட்டு குடும்பமாகத்தான் இருக்கும். அதிலும் குணசேகரன் கூட அமைதியாக இருந்த பொழுது கதிர் தான் ஓவராக துள்ளினார். அந்த வகையில் எப்படியாவது பிரச்சினையை பெருசாக்கி மறுபடியும் குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் கதிர் உடைய திட்டம்.

இது எதுவும் புரிந்து கொள்ளாத குணசேகரன், கதிரை கண்முடித்தனமாக நம்புகிறார். கடைசியில் குணசேகரன் தர்ஷனை அனுப்பி வைத்த நிலையில் தர்ஷனிடம் குற்றவை விசாரணை செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஜனனி தான் என்று கதிர் சக்தி, ஜனனி மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே சக்திக்கு ஜனனி மீது விரிசல் வந்துவிட்டது.

தற்போது குந்தவை வந்த நிலையில் சத்திடம் ஒரு சில மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் ஒரு டீ குடிக்கும் போது டீக்கடைக்காரர் பேசிய வார்த்தைகள் என் மண்டைக்கு ஏறி புத்தி தெளிந்து விட்டது என்று சொன்ன சக்தி, அதை சரி செய்யும் விதமாக என்ன பண்ணினார் என்பது தான் இப்பொழுது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த டீக்கடைக்காரர் பேசுவதற்கு முன் ஜனனி மற்றும் அன்னிகளுக்கு சப்போர்ட்டாக இருந்தார்.

தற்போது குணசேகரனுக்கு சப்போர்ட்டாக ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார். இதுதான் சக்தியிடம் இருக்கும் வித்தியாசம். இதுக்கா சக்தி ஓவராக அலப்பறை பண்ணினார். தற்போது ஜனனிடம் சக்தி பேசிக் கொண்டிருக்கும் பொழுது குந்தவை கால் பண்ணி கூப்பிடுகிறார். அப்பொழுது கூட குந்தவையை பார்த்து பேசின விஷயத்தை சக்தியை சொல்லவும் இல்லை, இப்பொழுது குந்தவையை தான் பார்க்கப் போகிறேன் என்பதையும் ஜனனிடம் சொல்லவில்லை.

ஆக மொத்தத்தில் சக்திக்கு குந்தவை மீது இஷ்டம் வந்துவிட்டது. இதற்குப் பின்னணியில் குணசேகரன் தான் மறைமுகமாக இருப்பது போல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொல்லுவதும் ஜனனி சக்திக்கு விவாகரத்து செய்துவிட்டு குந்தவையை கல்யாணம் பண்ணி வைக்கலாம் கூட என்று யோசித்து இருப்பார். ஆனால் கதிர், அண்ணன் ஏதோ ஒரு முடிவு எடுக்கப் போகிறார் என்பதை நினைத்து பயப்பட ஆரம்பித்து விட்டார்.

ஒருவேளை சொத்துக்களை பிரித்துவிட்டு நமக்கு நாமத்தை போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் இருக்கும் கதிரிடம் அறிவுக்கரசி சப்போட்டாக பேசி எல்லா சொத்துக்களையும் நான் உங்களுக்கு வாங்கித் தருகிறேன் என்று கதிரை ஆறுதல் படுத்தி இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து குணசேகருக்கு பெரிய நாமத்தை போடவும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் தர்ஷன் கல்யாணமும் நின்றுவிடும், குணசேகரனும் ஏமாறப்போகிறார்.

Advertisement Amazon Prime Banner