அய்யனார் துணை சீரியலில் சேரனிடம் உண்மையை சொன்ன நிலா.. சோழன் செஞ்ச துரோகம், கேள்விக்குறியான ரிசப்ஷன்

ayyanar thunai
ayyanar thunai

Ayyanar Thunai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியல் தற்போது மக்களின் பேவரிட் சீரியலாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் 4 அண்ணன் தம்பிகளின் எதார்த்தமான நடிப்பு. ஊரில் உள்ளவர்கள் இந்த குடும்பத்தை ஏளனமாக பேசுவதை தடுத்து, எப்படி இவர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்து தான் இந்த கதை நகர்ந்து கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் நிலாவுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் நிலா அந்த வீட்டு டிரைவர் சோழனுடன் உதவி கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த நிலாவின் அப்பா மனோகர், நிலாவை கண்டுபிடித்து எப்படியாவது தான் பார்த்த மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க வேண்டும் என்று அலைந்தார். வேறு வழி தெரியாததால் நிலாவும் சோழனும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கல்யாணம் பண்ணி பதிவு பண்ண வேண்டிய சூழ்நிலை ஆகிவிடுகிறது.

இந்த விஷயம் எதுவும் தெரியாத சோழன் வீட்டில் இருப்பவர்கள் நம்ம வீட்டுக்கும் ஒரு பொண்ணு வந்து விட்டது. ஊர் மக்கள் என்னெல்லாம் நம்மளை திட்டினார்கள், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிலா சோழனின் கல்யாணத்தை பெரிய ரிசப்ஷன் வைத்து கொண்டாட வேண்டும் என்று சேரன் முடிவு பண்ணி விட்டார். அதனால் ஊரில் உள்ள மக்கள் அனைவரையும் கூப்பிட்டு ரிசப்ஷனுக்கு தயாராகி விட்டார்.

இதை எதிர்பார்க்காத நிலா, சோழனிடம் நீ ஏன் உண்மையை இன்னும் சொல்லாமல் இருக்கிறாய். என் குடும்பத்தை தான் நான் ஏமாற்றுகிறேன் என்றால் உன்னுடைய குடும்பத்தையும் என்னால் ஏமாற்ற முடியாது. இப்பொழுது இந்த ரிசப்ஷனும் நடக்கக்கூடாது எல்லோருக்கும் உண்மையையும் தெரிந்திருக்க வேண்டும் என்று சோழனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நிலா சோழன் கல்யாண விஷயம் அனைத்தும் செய்தி மூலம் ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டு பரவாயில்லை நிலா பெரிய இடத்துப் பொண்ணுதான். இந்த வீட்டிற்கு வாக்கப்பட்டு வந்திருக்கிறது என்று பெருமிதமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இவர்கள் புகழ்ந்து பேசுவதை பல்லவன் மற்றும் பாண்டியன் கேட்டு புல்லரித்து போய்விட்டார்கள்.

ஆனால் ரிசப்ஷனுக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நிலா பேசுவதை சேரன் கேட்டு விடுகிறார். பிறகு என்னாச்சு என்று நிலாவிடம் கேட்கும்பொழுது உங்களிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் விரும்பி கல்யாணம் பண்ணவில்லை. ஒரு கட்டாயத்தினால் எங்களுடைய கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. மத்தபடி இவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற உண்மையை சொல்கிறார்.

இதனை கேட்ட சேரன், சோழன் செய்தது துரோகம் தான் என்று முடிவெடுத்த நிலையில் ரிசப்ஷன் வேண்டாம் என்று முடிவு பண்ணி நிலாவின் சந்தோஷத்திற்கு ஏற்ற மாதிரி ரிசப்ஷனை கேன்சல் பண்ணி விடுவார். அத்துடன் ஊர் மக்களிடமும் இருந்து எல்லா திட்டுக்களையும் சேரன் வாங்கிக் கொள்வார். இருந்தாலும் நிலாவால் வெளியே போக முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் சேரன் அவருடைய வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து வருவார்.

Advertisement Amazon Prime Banner