
Sarath Kumar : குடி எவ்வாறு குடியை கெடுக்குமோ அதே போன்று தான் சூதாட்டமும் குடும்பத்தை கெடுக்கும். அவ்வாறு ரம்மி என்ற ஆன்லைன் விளையாட்டால் பல லட்சங்களை இழந்து நடுத்தர குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்தி அடிக்கடி வெளியாகி வருகிறது.
அவ்வாறு உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடியதாக இருக்கும் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்கள் பல நடிகர்கள். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக இருக்கும் ரித்திக் ரோஷன், அக்ஷய்குமார் ஆகியோர் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடித்துள்ளனர். உச்ச நடிகர்களாக இருக்கும் இவர்களே தங்களது ரசிகர்களுக்கு கேடு விளைவிக்கும் விளம்பரங்களில் நடித்திருக்கின்றனர்.
சட்ட விரோதமான ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள்
அடுத்ததாக பிரகாஷ்ராஜ், சரத்குமார், ரானா டகுபதி, பிரியா ஆனந்த், பிரனீதா, நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு ஆகியோர் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம் செயலிகளை விளம்பரப்படுத்தி இருக்கின்றனர்.
இதில் சரத்குமார் ரம்மி விளம்பரத்தில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நாம் எது சொன்னாலும் மக்கள் அப்படியே செய்து விடுவார்கள் என்பது முட்டாள்தனமானது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தவறு என்று உணர்ந்து அதை நிறுத்த கூறினேன். ஆனால் ஒப்பந்த காலம் முடியாமல் இருந்துள்ளது. இப்போது வேறு நிறுவனம் அதை வாங்கிய நிலையில் தான் நடித்த பழைய விளம்பரத்தை பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.