
Rajini : இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.
விக்ரமின் வீரதீர சூரன் படம் வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் பத்தாம் தேதி அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது.
இதற்கு பிறகு லோகேஷ் ரஜினி கூட்டணியில் உருவான கூலி, கமலின் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ரஜினி, அஜித்தை ஓரம்கட்டும் ஹீரோ
மேலும் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படம் உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் ரசிகர்கள் எந்த படத்திற்காக அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு போன்ற நடத்தப்பட்டது.
இதில் சூர்யாவின் ரெட்ரோ படத்தை பார்க்க தான் முதலில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக சூர்யாவின் குட் பேட் அக்லி படம் இடம் பிடித்திருக்கிறது.
மேலும் மூன்றாவது இடத்தில் ரஜினியின் கூலி படம் உள்ளது. கடைசியாக தான் கமல் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் இருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் இந்த வாக்கெடுப்பின் மூலம் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு தான் எதிர்பார்ப்பு இருப்பது என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக உள்ளது.