
Ajith : அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இப்படம் 500 கோடி கலெக்ஷன் செய்யும் என கூறப்படுகிறது.
இதற்காக சொல்லப்படும் ஐந்து காரணங்களை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக இது அஜித்தின் படம். அஜித்துக்கு என்று மாஸ் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.
அதோடு இந்த படத்தில் அப்பா, மகன் என்று அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் அஜித்திற்காகவே இந்த படம் நல்ல வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அவர் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி படத்தை பார்க்க ஐந்து காரணங்கள்
இதைத்தொடர்ந்து மூன்றாவதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகிறது. இதனால் கண்டிப்பாக கலெக்ஷனை அள்ள போகிறது.
அடுத்தபடியாக இந்த படத்தின் முதல் சிங்கிளான ஓஜி சம்பவம் பாடல் வெளியானது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் அவருடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்த அந்த பாடலை பாடியிருக்கிறார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
கடைசியாக குட் பேட் அக்லி படத்தின் முதல் 20 நிமிட காட்சிகள் மிரட்டும்படி இருக்கிறதாம். வேற லெவலில் அந்த காட்சிகளை இயக்குனர் செதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.