செகண்ட் ஹாஃப் பிடிக்கலைன்னு சொன்ன விக்ரம்.. உண்மையை உடைத்த இயக்குனர்

vikram-veera-dheerasooran
vikram-veera-dheerasooran

Vikram: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் வீரதீர சூரன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இப்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறது. அதில் இந்த படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

அவ்வாறு இயக்குனர் அருண்குமார் சொல்லிய விஷயம் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தை இவர் தான் இயக்கி இருந்தார்.

படத்தின் இரண்டாம் பாதி பிடிக்கலைன்னு சொன்ன விக்ரம்

அந்த படம் வெளியான சமயத்தில் விக்ரமிடம் கதை கூறியிருக்கிறாராம். முதல் பாதி நன்றாக இருக்கிறது, இரண்டாம் பாதி அவ்வளவாக தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகு சித்தார்த்தின் சித்தா படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். படம் வெளியான இரண்டு நாட்களில் விக்ரமிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. போனில் பேசும்போது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நான் சித்தா படம் இன்னைக்கு பார்க்கிறேன் என்று சொன்னாராம்.

படத்தைப் பார்த்துவிட்டு மறுநாள் காலையிலேயே போன் செய்தாராம். தனது மனைவி, தம்பி என குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் விக்ரம் பேசினாராம். சித்தா படத்தைப் பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்தாராம். அதன் பிறகு மீண்டும் விக்ரம் கதை எழுத சொல்லி உள்ளார்.

உடனே அருண்குமாரும் என்னிடம் ஒரு கதை இருக்கு ஆனா உங்களுக்காக எழுதனது இல்லை என்று கூறினாராம். சரின்னு உடனே படத்தின் வேலைகள் தொடங்கி ஆச்சு என்று அருண்குமார் கூறியிருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner