
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதுவரையிலும் ஆனந்தி கர்ப்பமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என்ற சந்தேகத்துடன் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் அடுத்த வாரம் வர இருக்கும் எபிசோடுகளில் ஆனந்தியின் கர்ப்பம் உறுதியாகிறது. டாக்டர் பரிசோதனைகளை முடித்துவிட்டு ஆனந்தியை நேரில் அழைத்து அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆனந்தி
இது ஆனந்தியின் தலையில் இடியை இறக்குகிறது. இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் நேரடியாக கோயிலுக்கு செல்கிறாள்
என் மீது விழுந்த இந்த பழியை நீக்கவில்லை என்றால் நான் என்னையே எரித்துக் கொள்வேன் என கடவுளிடம் முறையிடுகிறாள்.
அதே நேரத்தில் அன்பு காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறான். ஆனந்தியின் அம்மா குலதெய்வ கோவிலுக்கு பால் காய்ச்சும் போது பால் கெட்டு விடுகிறது.
இதை கெட்ட சகுனமாக நினைத்து அவர் வீட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஆனந்தியின் கர்ப்பத்தை வைத்து இனி இந்த சீரியலை எப்படி கொண்டு போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.