
TVK Vijay: ‘ எனது தரப்பில் ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின் முழு நேர அரசியல்வாதி ஆவேன்.’ 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பிக்கும் போது சொன்னது.
படத்த முடிச்சா தானே முழு நேர அரசியல்வாதி ஆக முடியும் என முடிவு செய்து விட்டது விஜயின் தற்போதைய நிலைமை.
ஏற்கனவே வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி, களம் காணாத தலைவர் என விஜய் விமர்சனம் பெற்று வருகிறார்.
மதில் மேல் பூனையான தளபதி
படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்குவார், அப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தது போல் இருக்கும் என அவருடைய ஆதரவாளர்கள் நினைத்தார்கள்.
ஆனால் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு அவ்வளவு சீக்கிரம் முடியாது போல. நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு காரணம் பட குழுவுக்கு தினசரி பேட்டா 20 நாட்களுக்கு மேலாக கொடுக்கப்படவில்லை. இதனால் பெப்சி நிறுவனம் இதில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது.
குபேரனுக்கு அடுத்த கட்டமாக இருக்கும் KVN தயாரிப்பு நிறுவனத்திற்கு பணப்பிரச்சனையா என்று எல்லோருக்குமே ஆச்சரியமாக இருக்கும்.
இதற்கு காரணம் சமீபத்தில் அந்த நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு தான். விசாரணை முடியும் வரை இந்த நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தான் ஜனநாயகன்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்குவதில் தாமதம். இதுவரை விஜய்க்கு தான் ஐடி ரெய்டு பிரச்சனை வரும். தற்போது அவர் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த பிரச்சனை வந்திருக்கிறது.