மூக்குத்தி அம்மன் 2 ஹீரோயின் மாற்றமா.? நயன்தாரா, சுந்தர் சி மோதல் பின்னணி

Mookuthi Amman 2: நயன்தாராவை சர்ச்சை ராணின்னு சும்மா சொல்லவில்லை. அவர் எது செய்தாலும் அதில் நிச்சயம் ஒரு பஞ்சாயத்து இருக்கும்.

அவர் நடிக்கும் படங்களில் தொடங்கி தற்போது சோசியல் மீடியா வரை அவருடைய பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது. அதில் இப்போது மூக்குத்தி அம்மன் 2 படப் பிரச்சனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் உள்ளூரிலேயே இதை நடத்தலாம் என நயன் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

நயன்தாரா, சுந்தர் சி மோதல் பின்னணி

ஆனால் சுந்தர் சி விருப்பப்படி இப்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு கொடுக்கப்பட்ட உடையை போட மாட்டேன் என நயன்தாரா பிரச்சனை செய்திருக்கிறார்.

இரண்டு முறை சுந்தர் சி இந்த பிரச்சனையை சமாதானமாக பேசி இருக்கிறார். ஆனால் உதவி இயக்குனரே கோபித்துக் கொண்டு இடத்தை காலி செய்யும் அளவுக்கு நயன்தாரா கோபத்தை காட்டியிருக்கிறார்.

இது சுந்தர்.சி-யை டென்ஷன் செய்திருக்கிறது. இதனால் படப்பிடிப்பும் நின்று போனதாக தகவல் கசிந்தது. ஆனால் பதறிப்போன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரச்சனையை தீர்த்து சமாதானம் செய்திருக்கிறார்.

ஆனாலும் சுந்தர் சி நயன்தாரா இருவர் இடையே இருக்கும் புகைச்சல் அப்படியே தான் இருக்கிறது. இதனால் விரைவில் ஹீரோயின் மாற்றப்படலாம் என்ற ஒரு அதிர்ச்சி தகவலும் கசிந்துள்ளது.

பொதுவாக சுந்தர் சி தன்னையும் கதையையும் நம்பி படம் எடுக்க கூடியவர். இது போன்ற பிரச்சனைக்கெல்லாம் அடிபணிய மாட்டார்.

ஹீரோயின் பிரச்சனை செய்தால் அவரை நீக்கிவிட்டு வேறு ஹீரோயினை வைத்து கூட படத்தை ஆரம்பித்து விடுவார், அதனால் மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து நயன்தாரா மாற்றப்படலாம் என கூறுகின்றனர்.

அவருக்கு பதில் தமன்னா இதில் நடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த அளவுக்கு சுந்தர் சி டென்ஷனில் இருக்கிறாராம்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் இந்த பிரச்சனை விஸ்வரூபமாக வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Leave a Comment