வருகிற 27ஆம் தேதி மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம். லைகா நிறுவனம் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படத்தை தயாரித்துள்ளது.
பிரித்விராஜ், மோகன்லால் இருவரும் தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுத்து, பணம் தட்டுப்பாட்டில் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு உதவியுள்ளனர். முதல்முறையாக மலையாளத்தில் ஐ மேக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோகுலம் மூவிஸ் இதை வினியோகம் செய்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மோகன்லால் பிரித்விராஜ் இருவரும் சென்னை வந்திருந்தனர். அப்பொழுது பிரபல யூ ட்யூபர் இர்பான் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். இர்பான் வியூஸ் என்ற சேனல் ஒன்றை நடத்தி வருபவர் இர்பான். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டது இந்த சேனல்.
இந்த நிகழ்ச்சியில் இர்பான் அவர்களுக்கு விசேஷமான ஒரு விருந்து கொடுத்துள்ளார். தன்னுடைய வீட்டில் செய்யப்பட்ட பிரத்தியேக அசைவ உணவுகளை கொடுத்து அசத்தியுள்ளார். மிகவும் கலகலப்பான இந்த பேட்டியில் பல ரகசியங்களை கேட்டுள்ளார் இர்ஃபான். அதற்கு மோகன்லால் மட்டும் பிரித்விராஜ் இருவரும் அவரை செமையாக கலாய்த்து உள்ளனர்.
எம்புரான் படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோல் பண்ணுகிறாரா என இர்ஃபான் கேட்டதற்கு, மோகன்லால் ஆமாம் என்று பதிலளித்தார். மேலும் அந்த காட்சிகளை சரியில்லை என டெலிட் செய்து விட்டதாகவும் கூறி கலாய்த்தார். அதற்கு ஏற்றார் போல் பிரித்விராஜும் டெலீட்டட் காட்சிகள் பின்னர் வெளியிடப்படும் எனக் கிண்டல் செய்தார்.