யாரும் எதிர்பார்க்காத விதமாக பல திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் 2. இப்பொழுது ஆதி குணசேகரன் மூன்று தம்பிகளையும் தன் பக்கம் ஆணி அடித்தார் போல் ஒட்டிக் கொள்ளும்படி பல வேலைகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே ஞானம் தலையில் மிளகாய் அரைத்து ஐஸ் கட்டிகளை வைத்துவிட்டார். இப்பொழுது அடுத்த கட்டமாக சக்திக்கு வலை விரித்து வருகிறார். சக்தி மட்டுமே நியாயமானவராக வளம் வந்து கொண்டு இருந்தார். இப்பொழுது அவருக்கு அறிவுக்கரசியை வைத்து ஒரு ஸ்கெட்ச் போட்டுள்ளார்.
தர்ஷன், கல்யாண வேலைகளை பார்க்கும் முழு பொறுப்பையும் குணசேகரன்,சக்தியிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம் கல்யாணத்துக்கு எதிரியாக இருந்த சக்தி செய்வதறியாது ஒத்துக் கொள்கிறார். இவரை வைத்து ஜனனியின் ஆதிக்கத்தை அடக்கவும் திட்டம் போடுகிறார்.
கல்யாணம் டெக்கரேஷன் வேலைகளை பார்க்கும் படி அறிவுக்கரசி சக்தியை அனுப்புகிறார். அங்கே அந்த பெண் ஏற்கனவே சக்தியை விரும்பிய பழைய காதலி. அதனால் அவர்களுக்குள் ஒரு விதமான பழக்கம் ஏற்பட்டு சக்திக்கு நெருடலை கொடுக்கிறது. அந்த பெண் சக்தியை பிசினஸ் பார்ட்னராகவும் சேர்த்துக் கொள்கிறார்.
சக்திக்கே தெரியாமல் அந்த பெண் வீட்டிற்கு வந்து விஷயத்தை போட்டு உடைக்கிறார். இதனால் வீட்டிற்கு வரும் சக்திக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. அறிவுக்கரசி, சக்திக்கு இந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாம் என பிட்டுகளை போடுகிறார். சிங்கப்பூர் கோடீஸ்வரி எனவும் அப்பெண்ணை அறிமுகப்படுத்தி ஒரு விதமாககால் காழ்ப்புணர்ச்சியோடு குடும்பத்திலும் சேர்த்து காய் நகர்த்துகிறார்.