Vijay: விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் கால் பதித்துள்ளதால் இதுதான் இவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதனால் விஜய் பட தயாரிப்பாளர் மிகுந்த சோகத்தில் உள்ளார்.
அதாவது விஜய் என்றாலே வசூல் மன்னன் என்ற பெயர் இருக்கிறது. அவரது படங்கள் எப்படி இருந்தாலும் வசூல் சாதனை படைத்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான்.
அப்படி விஜய்யின் படத்தை தயாரித்து குறுகிய காலத்திலேயே பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமாக மாறியது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ. இதன் நிறுவனர் தான் லலித் குமார்.
மகனை சினிமாவுக்கு கொண்டு வரும் விஜய் பட தயாரிப்பாளர்
விஜய்யின் நெருங்கிய உறவினரான இவர் மாஸ்டர், லியோ படங்களை தயாரித்து வெற்றி கண்டு இருக்கிறார். இது தவிர விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இப்போது விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தனது வாரிசை கொண்டுவந்துள்ளார் லலித். அவரது மகனை கதாநாயகனாக சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கிறார்.
விக்ரம் பிரபுவுடன் லலிதின் மகன் புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது தவிர மேலும் மூன்று படங்களை தனது மகனை கதாநாயகனாக வைத்து லலித் தயாரிக்கிறார்.
விஜய் படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தனது மகனை நம்பி லலித் பணத்தை போட்டுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.