எந்திரனுக்கு டூப் போட்ட மனோஜ் பாரதி.. இரங்கல் தெரிவிக்காத ரஜினி

Rajini : நேற்றைய தினம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி பாரதிராஜாவின் மகன் மனோஜின் இறப்பு தான். 48 வயதாகும் இவர் அண்மையில் இருதய சிகிச்சை செய்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடல் நீலாங்கரையில் வைத்திருந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்த அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜா தனது 16 வயதினிலே படத்தின் மூலம் கமலஹாசனை பிரபலம் அடைய செய்திருந்தார் .

கமலுக்கு பல ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் மனோஜின் இறப்புச் செய்தி கேட்டு நேற்று இரவே எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டிருந்தார். தனது ஆழ்ந்த இரங்கலையும் கமல் தெரிவித்திருந்தார்.

மனோஜ் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினி

அதேபோல் விஜய், சூர்யா, கார்த்தி என எக்கச்சக்க பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலை, சீமான் போன்ற அரசியல் பிரபலங்களும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி விட்டு சென்றனர்.

ஆனால் ரஜினி தனது இரங்கலை தெரிவிக்கும்படி ஒரு ட்வீட் கூட செய்யவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றினார் மனோஜ்.

அதோடு எந்திரன் படத்தில் சிட்டிக்கு டூப்பாக மனோஜ் தான் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு மனோஜும் முக்கிய பங்காக இருந்திருக்கிறார். அதோடு பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் பரட்டை என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு பாரதிராஜா, மனோஜ் என இருவருமே ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றனர். ஆனால் மனோஜின் இறப்பிற்கு ரஜினி இரங்கல் தெரிவிக்காதது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment