Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்தை பொறுத்தவரை பாண்டியன் கோமதியும் வீட்டை எதிர்த்து லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணினார்கள். அதே மாதிரி செந்தில் மீனா,ராஜி கதிரும் வீட்டுக்கு தெரியாமல் தான் கல்யாணம் நடந்தது. சரவணன் காதலித்தாலும் அப்பா பேச்சைக் கேட்டுக் கொண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இப்படி எல்லோரும் காதல் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கும் பட்சத்தில் அரசி செய்த காதலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பல கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அரசி காதலிக்கும் வயசு கிடையாது, அத்துடன் காதலிக்கும் பையனும் சரியில்லை, விரோதி குடும்பம் என்பதால் தான் அரசி காதலுக்கு அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள்.
தற்போது இதையெல்லாம் முடிந்த நிலையில் பாண்டியன், குமரவேல் மூலம் மறுபடியும் அரசிக்கு தொந்தரவு வந்துவிடும் என்ற பயத்தினால் அரசியை நல்ல குடும்பத்தில் கட்டிக் கொடுத்து விடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் ஏற்கனவே பாண்டியனிடம் அக்கா வீட்டுக்காரர் பையனுக்கு அரசியை பொண்ணு கேட்டு போயிருந்தார்.
ஆனால் பாண்டியன் தான் அரசியின் காதல் விவகாரம் தெரியதற்கு முன் மச்சானிடம் என் பொண்ணு நல்லா படித்து பெரிய ஆளா ஆனதுக்கப்புறம் தான் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் தற்போது சூழ்நிலை எதுவும் சரியில்லை என்பதால் கல்யாணமே பண்ணி கொடுத்துடலாம் என்று முடிவு எடுத்துவிட்டு பாண்டியன் அவருடைய அக்கா உமையாள் வீட்டுக்கு போகிறார்.
அங்கே போனதும் அக்கா பையன் சதீஷ்க்கு பொண்ணு கொடுப்பதற்கு சம்மதம் என்று தெரிவித்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் அரசியை கூப்பிட்டு பொண்ணு பார்க்க வருகிற விஷயத்தை சொல்லி உனக்கு சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு அரசியும் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்று ஓகே சொல்லி விடுகிறார்.
ஆனால் இதையெல்லாம் கெடுக்கும் விதமாக சுகன்யா, அரசியை சந்தித்து வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இப்படி தான் ஏதாவது முடிவெடுத்துக் கொண்டே இருப்பாங்க. அதற்கெல்லாம் நாம் கலங்கிட கூடாது, அப்படி நீ வீட்டில் சொல் பேச்சைக் கேட்டு கல்யாணம் பண்ணிட்டா குமரவேலுடன் பழகின விஷயம் பொய்யாக போய்விடும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசுகிறார்.
இதையெல்லாம் பார்த்த அரசி இனியும் சுகன்யா பேச்சை கேட்கக் கூடாது என்று சொன்னா சுகன்யாவுக்கு சரியான பதில் கொடுக்கும் விதமாக என் குடும்பத்துக்காக அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நான் என்ன வேணாலும் முடிவு எடுத்து விடுவேன் என்று சொல்லி சுகன்யா மூஞ்சில் கரியை பூச போகிறார். ஆனாலும் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு சக்திவேல் மற்றும் குமரவேலு சேர்ந்து ஏதாவது சதி வேலைகளை செய்து அரசி மனசை மாற்றி விடுவார்கள்.