வீரதீர சூரன் படம் இன்று ரிலீஸ் ஆக இருந்தது. காலை 9 மணிக்கு முதல் காட்சி ரிலீஸ் செய்ய அனைத்து திரையரங்குகளும் ஆவலாக இருந்தது. ஆனால் B4U என்டர்டைன்மென்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது.
மேலும் 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், நான்கு வாரங்கள் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் உத்தரவு போட்டது. இதற்கு முக்கியமான காரணம் OTT ரிலீஸ் செய்தியை அறிவிக்காமல் அவர்கள் தியேட்டரின் ரிலீஸ் தேரியை அறிவித்து விட்டனர். இதுதான் இப்பொழுது பூதாகர பிரச்சனையாக மாறி உள்ளது .
அப்படி OTT ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படத்தை தியேட்டரில் வெளியிட்டால் B4U நிறுவனத்திற்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட நேரிடும் என்பதால் அந்த நிறுவனம் கோட்டிற்கு சென்றுள்ளது. இதனை விசாரித்த ஹை கோர்ட் காலை 10.30 வரை இந்த படத்தை திரையிடக்கூடாது என உத்தரவு போட்டது.
தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இப்பொழுது இந்த படத்திற்கான தடை நீங்கியுள்ளது. மாலை 6 மணிக்கு படம் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகப்போகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் திடீரென பிரச்சனைகளை சந்தித்ததால் மொத்த படக் குழுவும் அப்சட்டில் இருந்தது.
ஏற்கனவே இந்த படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது அதன்பின் குடியரசு தினம் என்று சொன்னார்கள் இப்பொழுது மார்ச் 27க்கும் தடை வந்துவிட்டது. இப்பொழுது சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 2 மணிக்குள் படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டனர் ஆனால் நேரம் இழுத்துக் கொண்டே போனதால் மாலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.