வசூலில் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. தயாரிப்பாளர் கொடுத்த குட் நியூஸ்

Ajith : ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் குட் பேட் அக்லி படம் உருவாகி இருக்கிறது. விடாமுயற்சியை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.

அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. விடாமுயற்சி படம் தான் வந்த வேகத்தில் போய்விட்டது.

குட் பேட் அக்லி கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வசூல் குறித்து பேசி இருக்கிறார்.

குட் பேட் அக்லி குறித்து தயாரிப்பாளர் சொன்ன விஷயம்

அதாவது குட் பேட் அக்லி படம் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இதனால் இப்படம் முதல் நாளே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெறும்.

அதுமட்டுமின்றி இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் குட் பேட் அட்லி படத்திற்கு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். இவர் பேசியது அஜித் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் கடந்த முறை விடாமுயற்சி ஏமாற்றிவிட்ட நிலையில் அதேபோல் இந்தப் படம் ஆகிவிடக் கூடாது என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குட் பேட் அக்லி படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Comment