Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி சொன்ன பொய்யினால் மொத்தமாக நொறுங்கிப் போய் இருக்கும் விஜயா, வீட்டுக்கு போக முடியாமல் பார்வதி வீட்டிலேயே இருக்கிறார். மீனா, பார்வதி அத்தைக்கு போன் பண்ணி விஜயாவை பற்றி விசாரிக்கிறார். அப்பொழுது விஜயா ரொம்ப கோபத்தில் இருக்கிறார், ரோகிணி சொன்ன பொய்யை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நேற்று முழுவதும் சாப்பிடாமல் அதைப் பற்றிய யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று பார்வதி, மீனாவிடம் சொல்லி எப்படியாவது உங்க மாமாவை வந்து பேசி கூட்டிட்டு போக சொல்லு என சொல்கிறார். உடனே மீனாவும், பார்வதி சொன்ன விஷயத்தை முத்துவிடம் சொல்லி விஜயாவுக்காகவும் ரோகிணிக்காகவும் பீல் பண்ணி பேசுகிறார். இதை பார்க்கும் பொழுது பொய் சொல்லி ஏமாற்றிய ரோகினி மீது கூட அந்த அளவுக்கு கோபம் வரவில்லை. தியாகியாக நடித்துக் கொண்டிருக்கும் மீனா மீது எரிச்சல் தான் வருகிறது.
பிறகு முத்து கொடுக்கும் ஐடியா என்னவென்றால் அம்மாவை சமாதானப்படுத்த வேண்டும், ரோகினியை வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்றால் அதற்கு பாட்டி வந்தால் மட்டும் தான் சரியாக இருக்கும். அதனால் நான் பாட்டியிடம் பேசிக் கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார். அதற்கு மீனா, இவ்வளவு பெரிய விஷயத்தை பாட்டியிடம் சொன்னால் அவங்க எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாது.
அதனால் மாமாவிடம் ஒரு வார்த்தை பேசிட்டு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அண்ணாமலையிடம் பேச போகிறார்கள். அந்த நேரத்தில் மனோஜ் குடித்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக் கொண்ட விஷயத்தை அவருடைய நண்பர் முத்துவிடம் வந்து சொல்கிறார். இதை கேட்டதும் அண்ணாமலை, மனோஜ் நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார். உடனே முத்து, அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நான் போய் கூட்டிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார்.
அதற்கு அண்ணாமலை, நானும் வருகிறேன் குடிப்பழக்கமே இல்லாமல் இருந்த மனோஜ் இப்பொழுது இப்படி மாறியது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. நான் போலீஸ் ஸ்டேஷனில் வந்து கூட்டிட்டு வருகிறேன் என்று முத்து கூட கிளம்புகிறார். இதற்கிடையில் ரோகினி, வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மனோஜ் ஒரு வார்த்தை கூட இன்னும் பேசவில்லை. போன் பண்ண வில்லை என்று மனோஜ் பற்றி ஃபீல் பண்ணி பேசுகிறார்.
அதற்கு வித்யா நீயும் போன் பண்ணவில்லை, நீ போன் பண்ணுவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதனால் நீ போன் பண்ணி பாரு என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி ஃபோன் பண்ணாமல் எப்படி அந்த வீட்டிற்குள் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் மறுபடியும் விஜயா வீட்டுக்குள் கெத்தாக போக வேண்டும் என்று யோசிக்கிறார்.
அதனால் ரோகிணி அம்மாவாக போகிறார் என்ற கதை அடுத்து வரப்போகிறது. அதன் மூலம் ரோகிணி விஜயா வீட்டுக்குள் ஈசியாக போய்விடுவார். மேலும் ரோகிணி கர்ப்பம் ஆகிவிட்டால் விஜயா குடும்பம் ஒட்டுமொத்தமாக சந்தோசமாக மாறிவிடும். முத்துவும் மீனவும் சந்தோஷத்தில் ரோகினி விஷயத்தில் இனி தலையிட மாட்டார்கள், அதற்கு ஏற்ற மாதிரி ரோகிணி கர்ப்பமான பிறகு தான் க்ரிஷ் பற்றிய விஷயமும் வெளிவரப் போகிறது.