மகாநதி சீரியலில் காவிரியிடம் பீல் பண்ணி பேசும் நவீன்.. விஜய்க்கு தெரிய வரும் உண்மை, செக் பண்ண போகும் VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், நர்மதாவின் சடங்கு விஷயத்தில் விஜய் அவமானப்பட்டதை நினைத்து காவேரி தனியாக பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நவீன், யமுனாவை கூட்டிட்டு போவதற்காக வீட்டிற்கு வருகிறார். அப்படி வரும்பொழுது தனியாக இருக்கும் காவிரியிடம் நவீன் பேசுகிறார். அதாவது விஜயை பார்க்கும் பொழுது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.

அதுவும் பங்க்ஷனில் நடந்த சம்பவம் விஜயை அதிகளவில் பாதித்திருக்கும். உனக்காக தான் விஜய் இங்கே வந்து இருக்கிறார், உன் மனசிலும் விஜய் தான் இருக்கிறார் என்றால் ஏன் இரண்டு பேரும் தனியாக பிரிந்து இருக்க வேண்டும். அவர் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை அவர் இங்கு வந்து நிரூபித்துக் காட்டி விட்டார். அதனால் பேசாமல் நீ அவருடன் சேர்ந்திடு அப்பதான் உனக்கும் நிம்மதியாக இருக்கும் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

அதற்கு காவிரி நீ சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் வெண்ணிலா பிரச்சனை முடிவுக்கு வராமல் நான் அங்கே போனால் அது விஜய்க்கு தான் சங்கடமாக இருக்கும். இதைப்பற்றி நான் ஏற்கனவே விஜய் இடமும் பேசி நாங்கள் இரண்டு பேரும் ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம். அதனால் கூடிய சீக்கிரத்தில் வெண்ணிலா சரியானதுக்கப்புறம் இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என்று நவீனுக்கு பதில் சொல்லி விடுகிறார்.

உடனே நவீன், யமுனாவை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக காவேரி தல சுத்துதலாக இருக்கு, ஏதாவது வாசனை வந்தால் கொமட்டலாக இருக்கிறது என்று கங்காவிடம் சொல்கிறார். அப்பொழுது கங்கா, காவிரிக்கு பால் கொடுக்கும் பொழுது அந்த வாசனையும் பிடிக்காமல் காவிரி வாந்தி எடுத்து விடுகிறார். உடனே காவிரி யாருக்கும் தெரியாமல் தோழிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார்.

அப்பொழுது காவிரியின் தோழி, நீயும் விஜயும் தான் ஒன்று சேரவில்லை என்று சொன்னீங்க தானே, பிறகு எப்படி நீ கர்ப்பமாக இருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு காவேரி, உன்னிடம் பேசிய பிறகு நாங்கள் ஒரு சூழ்நிலையில் சேர்ந்து விட்டோம் என்று சொல்கிறார். உடனே காவிரியின் தோழி அப்படி என்றால் உடனே நீ செக் பண்ணி விடு என்று சொல்கிறார்.

காவிரி செக் பண்ணுவதற்கான கிட்டு வாங்கிட்டு வந்து யாருக்கும் தெரியாமல் செக் பண்ணுகிறார். அந்த வகையில் விஜய் மற்றும் காவிரி, அம்மா அப்பாவாக போகிறார்கள். வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் காவிரி மறைக்கப் போகிறார். விஜய்க்கு மட்டும் தெரிந்த நிலையில் காவிரியை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.

Leave a Comment