விஜய்யை மொத்தமாய் மாற்றிய கண்ணப்பனுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 60 படங்களில் கலக்கியும் தொடரும் பிரச்சனை

இயக்குனர் சேரன் மூலம் அறிமுகமான அந்த காமெடி நடிகர் இன்று வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவர் வாழ்க்கையில் வறுமை மட்டும் அவரை விட்டு நீங்காமல் இருக்கிறது. இப்பொழுது தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் படும் கஷ்டத்தால் உதவி கேட்டு வருகிறார்.

2000ஆவது ஆண்டு தமிழ் சினிமாவில் வெற்றி கொடி கட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பெஞ்சமின். ஆரம்பத்திலிருந்து காமெடியில் தன்னை நிலை நிறுத்திய போதிலும் 24 வருடங்களாக இவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் இப்பொழுது வறுமையின் பிடியில் அவஸ்தை படுகிறார்.

அட நம்ம தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தில் நண்பராக வரும் கண்ணப்பனின் பெயர் தான் பெஞ்சமின. அந்த படத்தில் இவர் மரணத்திற்குப் பிறகுதான் விஜய் விஸ்வரூபம் எடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவார். இவர் பல பெரிய நடிகர்களுடன் கூட்டணி போட்டு காமெடியில் கலக்கியுள்ளார்.

வெற்றி கொடி கட்டு படத்தில் துபாயிலிருந்து வந்த வடிவேலுவை,சைக்கிளில் வந்து மிக அசிங்கமாக திட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பெஞ்சமின். அதுதான் அவரது முதல் படம். அதற்குப் பிறகு சினிமாவில் நிறைய காமெடி கதாபாத்திரங்களில் கலக்கினார். ஆட்டோகிராப் அருள் வசூல்ராஜா, ஐயா, திருப்பாச்சி போன்ற படங்களில் ரசிகர்களை கவர்ந்தார்.

இன்று 59 வயது வயதில் மிகவும் நொடிந்து காணப்படுகிறார். நெஞ்சு வலி காரணமாக ஏற்கனவே மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் மொத்தம் 60 படங்களுக்கு மேல் நல்ல நல்ல கதாபாத்திரங்களை நடித்துள்ளார். திருப்பாச்சி படத்தில் திருப்புமுனையாக இருந்த இவரை விஜய் ஆதரிப்பாரா என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும்.

Leave a Comment