தவெக நிகழ்ச்சிகளில் அசைவ உணவு இல்லையா.? பங்கம் செய்த விஜய்

Vijay : விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில் எல்லோருக்குமே சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது அவர் சில விஷயங்களை கூறியிருந்தார். அதாவது நல்ல விஷயம் நடக்கும் போது சைவ உணவு பரிமாறுவது தான் நல்லது.

அதோடு செயலாளர்களும் சைவம் தான் விரும்புகிறார்கள் என்று பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

தவெக மெனுவில் இடம் பெற்ற வித்தியாசமான இரண்டு உணவுகள்

இந்த இடத்தை இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தவெகவின் மெனு லிஸ்ட் வெளியாகி இருந்தது. காலையில் பொங்கல், வடை, சாம்பார், டீ ஆகியவை இடம் பெற்றிருந்தது.

2500 பேருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 21 வகை பண்டங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் எல்லாமே சைவமாக உள்ள நிலையில் இரண்டு மட்டும் வித்தியாசமாக இடம்பெற்று இருந்தது.

அதாவது வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் சைவ மீன் குழம்பு என்று குறிப்பிட்டிருந்தனர். சைவ உணவு மட்டுமே இந்த கட்சியில் போடப்படுகிறது என்பதற்கு கலாய்க்கும் விதமாக விஜய் இதை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. வெஜ் பிரியாணியா அல்லது மட்டன் பிரியாணியா, சைவ குழம்பா அல்லது மீன் குழம்பா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.

Leave a Comment