
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகும் எபிசோடாக இன்றைய எபிசோடு அமைய இருக்கிறது.
ஒரு பக்கம் தான் கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றாலும் இன்னொரு பக்கம் ஆனந்திக்கு மனக்குழப்பம் அதிகமாகவே இருக்கிறது.
உண்மையை தெரிந்து கொண்ட அன்பு
இதனால் தான் அன்புவை நேரில் கூட பார்க்காமல் ஆனந்தி ஒதுங்கிப் போகிறாள். ஆனால் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புக்கு இந்த விஷயம் தெரிந்தது போல் காட்டப்படுகிறது.
ஆனந்தியை மருத்துவமனையில் இறக்கிவிடும் ஆட்டோக்காரர் இந்த விஷயத்தை சொல்கிறார். அதே நேரத்தில் ஆனந்தி பரிசோதனைக்கு செல்லும் மருத்துவமனைக்கு ஹாஸ்டல் வார்டன் வருவது போலவும் காட்டப்படுகிறது.
இந்த நிலையில் பரிசோதனை அறிக்கையை பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டரிடம் ஆனந்தி முடிவு பற்றி கேட்கிறாள்.
டாக்டர் ரொம்பவே யோசிப்பது போல் இந்த ப்ரோமோ முடிகிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக தான் தவறாக சொல்லிவிட்டது என்று டாக்டர் முழிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் இரண்டாவது பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பதை சொன்னால் அவளுடைய தலையெழுத்தே மாறிவிடும். இன்றைய எபிசோடில் அந்த டாக்டர் என்ன சொல்ல இருக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.