கோபி போட்ட பிளாக் மெயில் ட்ராமாவில் சிக்கிய இனியா.. குறுக்கே வரும் பாக்கியா, நடக்கப் போகும் நிச்சயதார்த்தம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு எப்படியாவது சுதாகர் வீட்டு சம்பந்தத்தை முடித்து விட வேண்டும் என்ற ஒரு ஆசை. ஈஸ்வரிக்கு, பாக்கியாவை தோற்கடித்து தான் நினைத்தபடி கல்யாணம் நடக்க வேண்டும் என்ற ஒரு நினைப்பு.

தற்போது இது எல்லாம் கைக்கூடி வரும் விதமாக நெஞ்சுவலி டிராமாவை போட்டு இனியாவை பிளாக் மெயில் பண்ணி கோபி நினைச்சதை சாதிக்கும் வகையில் இனியாவே கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளும் அளவிற்கு சதி செய்துவிட்டார். உடனே பொண்ணு பார்க்க சுதாகர் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பாக்யா வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அங்கே இனியாவை கட்டிக் கொள்ளப் போகும் மாப்பிள்ளையாக வந்தது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில் கயலின் தம்பியாக நடித்து வரும் அன்புதான். பிறகு இவரையும் இனியாவையும் தனியாக பேச வைத்தார்கள். அப்படி பேசிய போது இனியாவிற்கு பெருசாக இந்த கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் சம்மதம் சொல்லிவிடுகிறார்.

இதனை அடுத்து நிச்சயதார்த்த வேலைகள் அனைத்தும் நடைபெற போகிறது. ஆனாலும் பாக்கியா மட்டும் இதில் முரண்படாக இருந்த நிலையில் இனியாவை வைத்து எப்படியாவது இதை நிறுத்த வேண்டும் குறுக்கே வந்து நிற்கிறார்.

அதற்கேற்ற மாதிரி சுதாகர் தான் அந்த ஹோட்டலை கேட்டு விலை பேசினார் என்று இனியாவிற்கு தெரிந்து விட்டால் நிச்சயம் இனியாவே இந்த ஒரு காரணத்தை காட்டி கல்யாணத்தை நிறுத்தி விடவும் வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் இனியா மற்றும் ஆகாஷ் தான் ஒன்று சேர போகிறார்கள். இவர்களை சேர்த்து வைப்பதும் பாக்யவாக தான் இருக்கும்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்