Memes: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா அல்லோலப்பட்டு கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் Ghibli ட்ரெண்ட் தான்.

Chatgpt இந்த ட்ரெண்டால் பயங்கர பிஸியாக இருக்கிறது. எங்கள கொஞ்ச நேரம் தூங்கவாச்சும் விடுங்க என அந்த டீம் கதறும் அளவுக்கு நம்மவர்கள் பாடா படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏகப்பட்ட போட்டோக்களை கொடுத்து இதை Ghibli பண்ணி குடுங்க என ஒரே கலாட்டா தான். சில முறை கேட்ட போட்டோ அழகாக வந்து விடுகிறது.

பலமுறை நம்ம ஒன்னு கேட்டா அது ஒன்னு கொடுக்குது. இதில் கல்யாண போட்டோவை கொடுத்தால் கையில் குழந்தையுடன் இருக்கும் போட்டோ வருகிறது.

இன்னும் சிலருக்கு கப்பிள்ஸ் போட்டோ கொடுத்தால் உடன் வேறு ஒரு பெண்ணோ பையனோ இருக்கும் போட்டோ வந்து குடும்பத்தில் குட்டையை குழப்புகிறது.

அந்த வீடியோக்கள் தற்போது இன்ஸ்டா ரீல்சாக வைரலாகி வருகிறது. யாருடா இது? என் போட்டோ கேட்டா வேற என்னவோ கொடுத்திருக்க என chatgpt- யையும் விட்டு வைக்கவில்லை.

ஒழுங்கா போட்டோ குடுக்க தெரிஞ்சா குடு இல்ல பேசாம இரு தப்பு தப்பா பண்ணி அடி வாங்காத.

நாட்டுல நம்ம தவிர எல்லாரும் ghibli ட்ரெண்டு பண்ணி சந்தோஷமா இருக்காங்க போல என பல மீம்ஸ் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதன் தொகுப்பு இதோ.