கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை இளைஞர்களின் மிகப்பெரிய ஏக்கமே இதுதான்.

இதையெல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் செயலில் காட்டும் பொழுது தான் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் மீதே வெறுப்பு வந்து விடுகிறது.

தோனி ஆடுனா மட்டும் போதும் என நினைச்ச சிஎஸ்கே ரசிகர்கள் இப்போது ஜெயிக்கிறது எப்போதான் சார் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

தோனியின் மீதே அதிருப்தி

இதற்கு காரணம் கடைசியாய் நடந்த இரண்டு போட்டிகள். கிட்டதட்ட சேப்பாக்கம் மைதானம் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோட்டை என்று கூட சொல்லலாம்.

ஆனால் அந்தக் கோட்டையை தகர்த்து எறிந்து இருக்கிறது பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள். கிட்டத்தட்ட 17 வருடங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்றுக் கொண்டிருந்த பெங்களூர் அணி இந்த வருடம் ஜெயித்திருக்கிறது.

டெல்லி அணி நேற்றைய போட்டியில் சென்னை அணியை நிராயுதபாணியாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்.

என்னதான் ஆச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இனி தயவு செய்து சேப்பாக்கம் மைதானத்தை சிஎஸ்கே வின் கோட்டை என்று சொல்லாதீங்க என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.

தோணி என்பவரை தாண்டி கோப்பையும் முக்கியம் என உணர ஆரம்பித்து விட்டார்கள் சென்னை அணியின் தீவிர ரசிகர்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment