Singappenne : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கபெண்ணே தொடர் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஆனந்தி எதிர்பாராத பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இதில் என்ன கொடுமை என்றால் தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதற்கு காரணம் யார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை ஆனந்தி கர்ப்பத்தை மறைத்து வந்த நிலையில் வில்லி மித்ராவுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. இதற்கு காரணம் மகேஷ் தான் என்றும் இது வெளியில் தெரிந்தால் தனக்கு அவர் கிடைக்க மாட்டார் என்று மித்ரா அதிர்ச்சி அடைகிறார்.
எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சிங்கபெண்ணே
மற்றொருபுறம் ஆனந்தி தனது பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும் நிலையில் அவர்கள் நேரடியாகவே வந்து விடுகிறார்கள். தனது அம்மாவை கட்டி தழுவி அழுகிறார் ஆனந்தி.
மேலும் ஆனந்தி தற்போது வரை அன்புவை சந்திக்காமல் இருக்கிறார். அதோடு டாக்டர் இந்த விஷயத்தை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது இன்னும் ஒரு மாசம் போனா உன் வயிறு காட்டிக் கொடுத்து விடும் என்று ஆனந்தியிடம் கூறுகிறார்.
இதற்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஆனந்தியின் கர்ப்ப விஷயம் அன்புக்கு தெரிய வந்தால் மட்டுமே முடிவுக்கு தெரியும். அவரே ஆனந்தியை மகேஷ் உடன் சேர்த்து வைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஆனந்தி, அன்பு உடன் தான் சேர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆகையால் இயக்குனர் எந்த மாதிரி ட்விஸ்ட் வைத்துள்ளார் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.