Ethir Neechal 2 : எதிர்நீச்சல் தொடர் முதல் பாகம் பெற்ற வரவேற்பு இரண்டாம் பாகம் பெறவில்லை. இப்போது சூடு பிடிக்கும் கதைகளத்துடன் தொடரை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர். அதாவது குணசேகரனின் செல்வாக்கு வீட்டில் செல்லுபடியாகவில்லை.
எதிர்நீச்சல் மருமகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை வீட்டுக்கு வர வைக்க தனது அம்மாவுக்கே விஷயம் கொடுத்தார். மருமகள்களும் இதை நம்பி வீட்டுக்கு வந்துவிட்டனர்.
இப்போது அவர்களை காக்கா பிடிப்பதற்காக குணசேகரன் பல வேலைகளை செய்து வருகிறார். அதாவது குழம்பு வைத்தது, கூட்டு வைத்தது பிரமாதமாக இருக்கிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் குணசேகரன்.
சூடு பிடிக்கும் எதிர்நீச்சல் 2
மேலும் இவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என தம்பிகளிடம் கேட்கிறார். அதற்கு சரியான நேரத்தில் டைமிங் காமெடியில் பின்னி எடுத்து இருந்தார் கரிகாலன்.
நீங்க டைவர்ஸ் கொடுத்தாதான் அவங்க சந்தோஷமா இருப்பாங்க என்று உண்மையை போட்டுடைத்தார். இவனை எதாச்சும் பண்ண தான் அடங்குவான் என்று தம்பிகள் கரிகாலனை கண்டபடி திட்டுகிறார்கள்.
என்னதான் குணசேகரன், தலையில் ஐசை தூக்கி வைத்தாலும் மருமகள்கள் அதற்கு அசைவு கொடுக்க மாட்டார்கள். ஆனால் திட்டம் போட்டு எப்படியாவது இவர்களை வழிக்கு கொண்டு வர வேண்டும் என ஒவ்வொரு முயற்சியை மேற்கொண்டு வருகிறார் குணசேகரன்.