ட்ரெண்டிங் நடிகைகளை அணுகும் படக்குழு.. பிரசாந்த் 55 இல் இவர்கள் ஹீரோயின்களா.?

Prashanth : நடிகர் பிரசாந்தின் 55 ஆவது படத்தை ஹரி இயக்க இருக்கிறார். இன்று பிரசாந்தின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு இதற்கான பூஜையும் போடப்பட்டது‌. அதோடு இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.

23 வருடங்களுக்கு முன்பு 2002 ஆம் ஆண்டு ஹரி மற்றும் பிரசாந்த் கூட்டணியில் தமிழ் படம் வெளியாகி இருந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இணைந்து இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சாமி, சிங்கம், பூஜை என ஆக்சன் படங்களை எடுப்பதில் வல்லவர் தான் ஹரி. இவர் அருண் விஜய் வைத்து இயக்கிய யானை படமும் நன்றாக போனது. இப்போது பிரசாந்த் உடன் இணைந்திருக்கும் கதைக்களமும் ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக எடுக்கப்பட உள்ளது.

பிரசாந்த் 55 படத்திற்காக ஹீரோயின்களை அணுகிய படக்குழு

இந்த படத்திற்கு ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகிகள் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஜனநாயகம் படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

அவருடனும் படக்குழு பேசியுள்ளதாம். அதற்கு அடுத்தபடியாக ரசிகர்களில் கிரஷ் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் கயாடு லோஹர். இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கயாடு லோஹர் சிம்புக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரசாந்த் 55 படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகுவதால் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளை போட்டால் படம் வெற்றி பெறும் என்று வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆகையால் பூஜா ஹெக்டே மற்றும் கயாடு லோஹர் ஆகியோரிடம் படக்குழு அணுகிய நிலையில் அவர்கள் என்ன முடிவு சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும் படக்குழு மிக விரைவில் ஹீரோயினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்