Memes: சில பேருக்கு நம்ம எங்க இருக்கோம்னு தெரியக்கூடாது. அதே சில பேருக்கு நம்ம நல்லா இருக்கோம்னு தெரியக்கூடாது.

ஆனா முக்கால்வாசி பேருக்கு நம்ம உயிரோடு இருக்கோம்னே தெரியக்கூடாது. இது சொந்தக்காரர்கள் விஷயத்தில் பக்கவாக பொருந்தும்.

நமக்கு எதிரி வெளிய கிடையாது நம்ம சொந்தக்காரங்க தான். நம்ம முகத்துக்கு நேரா சிரிச்சு பேசறவங்க. முதுகுக்கு பின்னாடி கழுவி ஊத்துவாங்க.

அதே மாதிரி எங்கேயாவது பாத்துட்டா போதும் என்னப்பா இன்னும் கல்யாணம் ஆகலையா? படிச்சிட்டு வீட்ல சும்மா தான் இருக்கியா? என ஆண் பிள்ளைகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறவைத்து விடுவார்கள்.

அதே பெண்கள் என்றால் கல்யாணம் ஆயிடுச்சு இன்னும் குழந்தை பிறக்கலையா? 30 வயசு ஆயிடுச்சு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கலையா? உன் மாமியார் கூட சண்டையாமே.

இப்படி ஆறுதல் சொல்வது போல் வேதனையை குத்தி கிளறி விடுவார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அதற்கு நாம தான் ஊறுகாய்.

சொந்தக்காரங்க வீட்டு பங்க்ஷனுக்கு போறதும் 100 இன்டர்வியூ அட்டென்ட் பண்றதும் ஒன்னு தான். கேள்வியா கேட்டு சோதிக்காதீங்கடா.
இதுதான் பல பேரின் வெளிப்படையான கதறல். இப்படி சொந்தக்காரர்களால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் பார்த்து ரசிக்கக்கூடிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.