This Week OTT And Theatre Release Movies :தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தியேட்டரில் ஏப்ரல் பத்தாம் தேதி சோலோவாக குட் பேட் அக்லி வருகிறது.
அஜித்தின் நடிப்பில் உருவான இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் உருவான ராக்காயி படம் வெளியாகிறது.
ஓடிடி தளத்தில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி பெருசு படம் நெட்ஃபிளிக்ஸில் ஸ்டீரிமிங் செய்யப்பட உள்ளது. இது தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படம் ஏப்ரல் 13 Zee5 தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பைங்கிளி என்ற படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 11 வெளியாகிறது.
உத்ரம் என்ற தெலுங்கு படம் EYvWin தளத்தில் ஏப்ரல் 6 வெளியாகிறது. The Assessment, In The Last Lands,Seven Veils, magician dreams ஆகிய படங்கள் அமேசான் வீடியோவில் வெளியாகிறது.
இவ்வாறு இந்த புத்தாண்டு விடுமுறையை வீட்டிலேயே பார்க்கும் படி ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகிறது. ஆனால் தமிழில் பெருசு மற்றும் கிங்ஸ்டன் படங்கள் மட்டும் தான் இந்த வாரம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.