நந்தினி கழுத்தில் தாலிகட்டிய கதிர்.. இரண்டாகப் பிளவு பட்ட மருமகள்கள்

Ethir Neechal 2 : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 தொடர் திருப்பங்கள் நிறைந்ததாக போய்க்கொண்டிருக்கிறது. இப்போது மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக குணசேகரன் நடந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று சமைத்த சாப்பாடு எல்லாம் நன்றாக இருந்தது என்று புகழ்ந்து தள்ளி இருந்தார். இப்போது தனது தம்பிகளிடம் சொல்லி அவர்களது மனைவியிடம் அன்பு காட்டும்படி நடிக்க சொல்லியிருக்கிறார்.

இதனால் கதிர், நந்தினி கழுத்தில் தாலி கட்டி உருக்கமாக பேசுகிறார். நந்தினியும் அவர் பேச்சுக்கு மயங்கி விட்டார். இனிமே நமக்காக வாழ்வோம் என்று கதிரிடம் நந்தினி கூற அவரும் சம்மதம் தெரிவிக்கிறார்.

இரண்டு அணிகளாக பிரிந்த மருமகள்கள்

மற்றொருபுறம் ரேணுகாவுக்கு தங்க வளையல் வாங்கி மாட்டி விடுகிறார் ஞானம். இதனால் ரேணுகா மனதும் இறங்கி இருக்கிறது. இப்படி தங்களது கணவன் உடன் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் சேர்ந்து விட்டனர்.

ஆனால் ஈஸ்வரி மற்றும் ஜனனி இருவரும் இப்போது தனிமையாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் இப்போதும் தங்களது உரிமைக்காக போராடி வருகிறார்கள். நந்தினி, ரேணுகா இருவரும் குடும்பத்திற்காக இறங்கி வந்திருக்கின்றனர்.

ஒற்றுமையாக இருந்த மருமகள்களை இப்போது இரண்டாகப் பிரித்ததே குணசேகரின் முதல் வெற்றியாக இருக்கிறது. அடுத்தடுத்து பல சூழ்ச்சிகள் செய்து இவர்களை தனித்தனியாக பிரிக்க பல திட்டங்கள் போட்டு வருகிறார்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்