Ajith : குட் பேட் அக்லி படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களை உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த படத்திற்காக அஜித் பேனர் 200 அடிக்க வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் சரிந்தது.
அந்த வீடியோவில் வைரலாகி பலரையும் பதறச் செய்தது. இந்த சூழலில் குட் பேட் அக்லி படத்தின் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் இரண்டுமே விஜய் விமர்சிக்கும் படியாக வரிகள் எழுதப்பட்டிருந்தது.
முன்பு அப்படி தான் ரஜினி படத்தில் விஜய்யை விமர்சிக்கும் படியாகவும், விஜய் படத்தில் ரஜினியை விமர்சிக்கும் படி பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற ஓஜி பாடலில் துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும் ஒத்தாலா சம்பவம்டா என்ற வரி இடம்பெற்று இருந்தது.
விஜய்யின் வசனத்தை பேசும் அஜித்
மேலும் மற்றொரு பாடலில் துப்பாக்கி வெடிச்சா வரும் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு, கத்தி உரசும் போது வரும் சத்தம் மெலடி பீட்டு என்ற வரிகள் இடம்பெற்று இருக்கிறது. இதனால் விஜய்யின் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களை வைத்து இந்த வரிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டது.
அதோடு குட் பேட் அக்லி இன்டர்வல் சமயத்தில் வாட் ப்ரோ.. ஐ அம் பேக் என்று விஜய்யின் வசனத்தை அஜித் பேசுகிறார். படத்தின் கமர்சியலை கூட்டுவதற்காக இவ்வாறு இயக்குனர்கள் டயலாக் வைத்து விடுகிறார்கள்.
ஆனால் இது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே பெரிய போரே நடந்து வருகிறது. இணையத்தில் அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் கண்டபடி திட்டி ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த அஜித், விஜய் பஞ்சாயத்து தொடர்ந்து விடாமல் துரத்தி வருகிறது..