Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதா மற்றும் வித்யாவின் காதல் கைக்கூடி விட்டது. ஆனாலும் சீதாவை விட வித்தியா ஓவராக பண்ணுகிறார். இன்னொரு பக்கம் ரோகிணி ஷோரூம் வராமல் இருப்பதினாலும், பேச முடியவில்லை என்று ஏகத்தினாலும் மனோஜ் ரோகினி நினைப்பாவே இருக்கிறார்.
அத்துடன் ஷோரூமுக்கு வருபவர்கள் அனைவரும் ரோகினி செய்த விஷயங்களை பற்றி சொல்லும் பொழுது மனோஜ் இன்னும் அதிகமாகவே மிஸ் பண்ணுவது போல் பீல் பண்ணுகிறார். அந்த வகையில் என்னதான் விஜயா ரோகினிடம் பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்டாலும் மனோஜால் பேசாமல் இருக்க முடியாது.
இன்னும் கூடிய சீக்கிரத்தில் ரோகிணி தான் எல்லாம் என்று சொல்வதற்கு ஏற்ப மனோஜ் மொத்தமாக ரோகிணிடம் சரணடைந்து விடுவார். அதற்கு ஏற்ற மாதிரி ரோகினியும், ஷோரூமுக்கு போகவில்லை என்று பீல் பண்ணி வித்யாவிடம் போன் பண்ணி பேசுகிறார்.
அந்த கடுப்பினால் விஜயாவுக்கு மொத்தமாக பதிலடி கொடுத்து ஒரு ஓரமாக உட்கார வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய ரோகினி மனோஜை வைத்து காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார். அதனால் எப்படியாவது மனோஜிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி மறுபடியும் மனோஜ் மனதில் ரோகிணிக்கான இடத்தை பிடித்து விஜயா மூஞ்சில் கரிய பூசி விடுவார்.
ஏற்கனவே மனோஜ்க்கு ரோகினி இல்லாமல் எதுவும் பண்ண முடியவில்லை, அதனால் மனோஜ்க்கு வேற வழியிலே ரோகினி இடம் சரணடைந்து விடுவார். இதற்கிடையில் ரோகிணிக்கு இனிமேல் யாரும் சமைத்துக் கொடுக்க கூடாது அவளை சமைத்து சாப்பிட வேண்டும் என்று விஜயா சொல்லியதால் ரோகினி சமைக்க ஆரம்பித்து விட்டார்.
இதை பார்த்த சுருதி, மாமியாரின் ஃபேவரிட் மருமகள் தற்போது சமையல் செய்யும் மருமகளாக மாறிவிட்டார் என்று நக்கல் அடித்து பேசுகிறார். இதனால் கடுப்பான ரோகிணி, இப்படியே விட்டால் நம் நிலைமை மோசமாகிவிடும் என யோசித்து மனோஜ் மூலமாக எல்லோருக்கும் பதிலடி கொடுக்கப் போகிறார்.
அடுத்ததாக லோக்கல் ரவுடி சிட்டி, சத்யாவை மறுபடியும் தன்னுடைய அடிமையாக மாற்ற வேண்டும் என்று ஆட்களை வைத்து ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்து விட்டார். அப்பொழுது சத்யாவை மிரட்டி பழையபடி என்னுடன் வேலை பார் என்று ஆசை வார்த்தைகளை காட்டி பேசுகிறார். ஆனால் மீனாவின் தம்பி சத்யா உஷராகிய நிலையில் என்னுடைய படிப்பு எனக்கு முக்கியம். நான் உன்னுடைய ரவுடித்தனத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அங்கே வந்த முத்து, மச்சானுக்கு அனைவரிடமும் சண்டை போடுகிறார். அடுத்ததாக நீ என் மச்சானை பிளாக்மெயில் பண்ணி உன்னுடன் கூட்டணி சேர்ப்பதற்கு இன்னொரு தடவை முயற்சி பண்ணினாய் என்று தெரிந்தால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு போய்விடுகிறார். இந்த முத்து மத்த விஷயத்தில் என்னதான் உஷாராக இருந்தாலும் ரோகிணி விஷயத்தில் கோட்டை விட்டு ஏமாந்து போய் தான் இருக்கிறார்.