பலி கிடாவா ஆக்கப்பட்ட ருத்ராஜ்.. தோனியை வைத்து ஓரங்கட்டப்பட்ட ஒப்புக்கு சப்பானி

கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாது 2025 ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாய் நீக்கப்பட்டுள்ளார் ருத்ராஜ் கெய்க்வாட். நடப்பு தொடரில் சிஎஸ்கே யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால் அணி நிர்வாகம் ஒருவித சலசலப்புடனையே காணப்பட்டது. இப்பொழுது ருத்ராஜ் நீக்கம் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் மட்டுமல்லாது கடந்த மூன்று ஆண்டுகளில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ருத்ராஜ் மட்டுமே நன்றாக செயல்பட்டு வந்தார். இப்பொழுது அவரின் நீக்கம் தான் சிஎஸ்கே ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தோனியை கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாடை பலி கொடுத்து விட்டார்கள் என்றும் சந்தேகப்படுகிறார்கள்.

ருத்ராஜ் முழங்காலில் காயம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் முறையாக அறிவிப்பு விடுத்தனர். ஆனால் இதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருப்பதாக ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

சென்னை அணி ராஜஸ்தான் உடன் விளையாடிய பிறகு கடந்த ஒரு வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்பொழுது அணி வீரர்களுடன் ருத்ராஜ் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அது மட்டும் இன்றி அந்தப் பந்தை கையில் எடுத்தும் சுற்றிக்கொண்டு மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாடினார்.

முழங்காலில் எலும்பு முறிவு இருந்தால் இவ்வாறு செயல்பட முடியாது, இதில் ஏதோ உள் பிரச்சனை இருக்கிறது. ஏற்கனவே அவர் கேப்டனாக இருந்தாலும் முழு சுதந்திரம் அவருக்கு கிடையாது. தோனி தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார். இப்பொழுது தோனி ஏன் கேப்டனாக வேண்டும் என்ற கேள்வி தான் அனைவரின் மனதிலும் ஓடுகிறது.