Siragadikka Aasai: விஜயாவின் ஆசை மருமகளாக இருந்த ரோகினியை இப்போது பாடாய்படுத்தி வருகிறார். மனோஜுடன் இனி வேலைக்கு செல்லக்கூடாது என்று ரோகினியை தடுத்து நிறுத்திவிட்டார் அவரது மாமியார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் உனக்கு தேவையானதை நீனே சமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரோகினிடம் ஆர்டர் போட்டுவிட்டார். இதனால் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ரோகினியை கிண்டலடித்தார் சுருதி.
திடீரென ஒரு வேலை வந்த சூழலில் ரோகினி அதை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார். அப்போது விஜயா எங்கே போயிட்டு வர என்று கேட்கிறார். ஒரு ஃபங்ஷன் ஆர்டர் வந்துச்சு என்று ரோகினி சொல்ல எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்று கேட்கிறார்.
ரோகினியின் சம்பளத்தை வாங்கிய விஜயா
25 ஆயிரம் வந்தது என்று உடன் எங்க பணம் என்று விஜயா அதிரடி காட்டுகிறார். இப்ப பணம் எல்லாம் ஆன்லைன்ல தான் போடுறாங்க என்று ரோகினி சொல்ல அவரது ஏடிஎம் கார்டை வாங்குகிறார் விஜயா. மேலும் பாஸ்வோர்ட் கேட்கும் போது உங்களோட பையன் பிறந்த வருடம் தான் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் கிளம்புகிறார் ரோகிணி.
இதையெல்லாம் ஓரமாக முத்து மற்றும் மீனா இருவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்ன அம்மா இவ்வளவு அதிரடியா இறங்கிட்டாங்க என்று துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார் முத்து.
விஜயாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றால் மனோஜுடன் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று ரோகினி திட்டம் தீட்டுகிறார்.