நிலநடுக்கத்தை எதிர்த்து நிற்கும் கட்டிடங்கள்.. எவ்வாறு கட்டமைக்க வேண்டும்

Earthquake: இயற்கையை அழித்தால் அது நம்மை அழித்துவிடும். அது போல தான் இயற்கையை அழித்து வானுயர்ந்த கட்டிடங்களை கட்டி வருகிறார்கள். இதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டு பேரழிவை சந்திக்க நேரிடுகிறது.

இந்த வருடம் மட்டும் ஜப்பான், நேபால் என பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலரின் உயிரை பறி கொடுத்து இருக்கிறோம். அதுவும் ஜப்பான் தான் இயற்கை பேரிடர்களில் சிக்கி அடிக்கடி பல உயிர்களை காவு வாங்குகிறது.

நில அதிர்வை தடுக்க உயரமான மற்றும் தரமற்ற கட்டிடங்களை தவிர்க்க வேண்டும். ஆனால் இப்போதைய நவீன காலகட்டத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் தான் அதிகம் இருக்கிறது. இது தற்போது இன்றியமையாததாக மாறிவிட்டது.

அப்படி இருக்கும் சூழலில் பூகம்ப காலங்களிலும் அவற்றை தாங்கும் வடிவமைப்பு கொண்ட கட்டிடங்களை கட்ட வேண்டும். அதற்கு அடித்தளம் கட்டமைப்பு, இணைப்பு மூட்டுகள் மற்றும் தளத் தேர்வு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு ஆழமற்ற அடித்தளமும் முக்கிய காரணம்.

பூகம்பத்தில் இருந்து காக்கப்படும் கட்டிடங்கள்

மேலும் கட்டிடம் எஃகு வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டால் வடிவமைக்க செய்யும்போது திடமான மற்றும் செலவை குறைக்க பயன்படுகிறது. ஆனால் இதில் எஃகின் அளவை குறைக்காமல் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று.

பூம்புகம்பத்தின் அதிர்வை தாங்கும் ஒரு கட்டமைப்பை கட்டுவதில் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவர்களுக்கு இடையே ஆன இவை அழுத்தம் குவிந்து இருப்பதால் முறையாக தயாரிக்கப்பட்டு வலு சேர்க்கப்பட வேண்டும்.

இதன் மூட்டுக்களில் சரியான கான்கிரீட் நிரப்பப்பட்டு நங்கூரமிடப்பட வேண்டும். அடித்தளத்தில் களிமண் அல்லது தளர்வான மணல் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிக நில அதிர்வு ஏற்படும் போதும் எதிர்த்து நிற்கும் வடிவமைப்பு கொண்ட கட்டிடங்களின் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டது. இந்த வருடம் ஒரே ஒரு கட்டிடம் மட்டும் பெரிய நில அதிர்வுக்கும் சரியாமல் நிலைத்திருந்துள்ளது.