Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒருவரின் பிரிவு தான் நிரந்தரமான அன்பை அள்ளிக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக காவிரி மற்றும் விஜய் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனித்தனியாக இருக்கிறார்கள். ஆனால் அப்படி தனியாக இருக்கும் பொழுது இருவரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை எப்படி கொண்டு போக வேண்டும் என்ற முடிவு எடுத்து விட்டார்கள்.
அந்த வகையில் காவிரி போட்ட கண்டிஷன் என்னவென்றால் வெண்ணிலாவுக்கு சுயநினைவு வந்த பிறகு நம்முடைய கல்யாணத்தைப் பற்றி சொல்லி சமாதானப்படுத்தி விட்டு அதன் பிறகு நம்முடைய வாழ்க்கையை தொடங்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்குள் காவேரி கர்ப்பமானதால் வீட்டிலேயும் சொல்ல முடியாமல் விஜய்கிட்டையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
தற்பொழுது கங்காவும் கர்ப்பம் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் கங்காவை பொக்கிஷமாக பார்த்து எல்லா வேலைகளையும் காவேரி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விட்டார்கள். இதனால் காவேரியும் எதுவும் சொல்ல முடியாதுதால் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். மேலும் விஜய் தங்கிருக்கும் வீட்டின் ஓனர் விஜய்க்கு ஃபோன் பண்ணி உங்க வீட்டில் லைட் ஃபேன் எரிகிறது எப்பொழுது வருவீங்க என்று கேட்கிறார்.
அதற்கு விஜய் நான் வர கொஞ்சம் நேராகும் நீங்களே போயி எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டு வாங்க என்று சொல்கிறார். அப்படி சொல்லியதும் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எப்படி இருக்காங்க என்று விஜய், காவிரியை மறைமுகமாக கேட்கிறார். அதற்கு அந்த வீட்டின் ஓனர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் சௌக்கியமாக இருக்கிறார்கள்.
அதுடன் அந்த வீட்டிற்கு ஒரு குட்டி குழந்தை வரப் போகிறது என்று சொல்லியதும் விஜய் காவேரி சமீபத்தில் பேசிய விஷயத்தை யோசித்துப் பார்க்கிறார். அதாவது நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் கோவிலுக்கு வா என்று சொன்னதையும், ரொம்ப பீலிங்க்ஸ் ஆக நான் உங்களை ஒரு முறை அணைத்துக் கொள்ளலாமா என்று கேட்டதையும் நினைத்து காவிரி தான் கர்ப்பம் என்று நினைத்த விஜய் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து உச்சகட்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்.
எது எப்படியோ விஜய்க்கு காவிரி கர்ப்பம் என்ற விஷயம் தெரிய வந்துவிட்டது. அந்த வகையில் நேரடியாக காவிரியை பார்த்து பேசுவதற்கு விஜய் போகிறார். அப்படி விஜய் போயி பேசும் பொழுது காவிரியும் எல்லா உண்மையும் சொல்லி இரண்டு பேரும் சந்தோஷப்பட்டு கொள்வார்கள். அத்துடன் வெண்ணிலாவுக்கு முடிவு கட்டும் விதமாக வெண்ணிலாவின் மாமா வருகிறார். ஆனால் இந்த மாமனாரை வைத்து காய் நகர்த்துவதற்கு ராகினி மற்றும் பசுபதி பிளான் போடுகிறார்கள்.