புது வருடம் புதிய ஆரம்பம்.. புது மாதிரி லுக்கில் ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட போஸ்டர்

Harish Kalyan: இன்று எல்லோரும் தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் திரையுலகை பொருத்தவரையில் பல அப்டேட் வந்து கொண்டிருக்கிறது.

அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் ஒரு பக்கம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே சமயம் தக் லைஃப் பட முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

அதேபோல் தற்போது ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை நாம் பார்த்த சாக்லேட் பாய் லுக் கிடையாது.

முழு ஆக்சன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை லிப்ட் பட இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்குகிறார். போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் முகமே இரத்தம் சொட்ட இருக்கிறது.

அதேபோல் இப்படம் தற்போது சமூகத்தில் நடந்து வரும் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தும் என தெரிகிறது.

இப்படத்தில் ஸ்டார் பட நாயகி ப்ரீத்தி முகுந்தன் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இவர் தற்போது அதர்வாவுடன் இதயம் முரளி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் போஸ்டரில் புது வருடம் புது ஆரம்பம் புது மாதிரி வைப் என அறிவித்துள்ளனர். இதை தற்போது ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.