மீனா செய்த காரியத்தால் பாண்டியன் மீது ஆத்திரத்தில் இருக்கும் சக்திவேல்.. தங்கமயிலின் ரகசியத்தை மறைக்கும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஏற்கனவே சக்திவேலு பாண்டியன் குடும்பத்தை பழிவாங்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். அதற்காகத்தான் அரசியை வைத்து பாண்டியன் குடும்பத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குமரவேலுவை அரசி மனதில் இடம் பிடித்து காதலிக்கும்படி நடித்து கல்யாணம் பண்ணி டார்ச்சர் கொடுத்தால் பாண்டியன் குடும்பம் சுக்கு நூறாக உடைந்து விடும்.

அதன் மூலம் நம் பட்ட அவமானங்களுக்கு மருந்து போடலாம் என்று சக்திவேல் குமரவேலு மூலம் பிளான் பண்ணினார். இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்த நிலையில் அரசிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தத்தை பண்ணி விட்டார்கள். ஆனாலும் இந்த கல்யாணத்தை நிறுத்தி அரசியை எப்படியாவது கல்யாணம் பண்ணி விட வேண்டும் என்று குமரவேலு பிளான் பண்ணி வருகிறார்.

தற்போது மீனா, பட்டா இல்லாமல் ஆக்கிரமிப்பு நிலத்தை ஆட்டைய போட்ட சக்திவேலுவின் கடையை முறைப்படி இடிப்பதற்கு தயாராகி விட்டார். இதை தடுப்பதற்கு சக்திவேல் மற்றும் குமரவேலு பல முயற்சிகளை எடுத்தார்கள். ஆனாலும் மீனா சட்ட ரீதியாக எடுக்கும் எல்லா விஷயமும் சரியாக இருப்பதால் சக்திவேல் மற்றும் குமரவேலு ஒன்னும் பண்ண முடியவில்லை. கடைசியில் இவர்கள் கண் முன்னாடியே மீனா சொன்னபடி கடையை இடித்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பாண்டியன் வீட்டு வாசலில் நின்னு கத்தி கூச்சலிட ஆரம்பித்துவிட்டார். அப்பொழுது பாண்டியன் இல்லாததால் கோமதி மற்றும் செந்தில் வாசலுக்கு வந்து என்னவென்று கேட்கும் பொழுது மீனா செய்த காரியம் தெரிய வந்ததும் செந்தில் மற்றும் கோமதி மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி சக்திவேலுவை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

இதனால் ஒட்டுமொத்த கோபத்துடன் இருக்கும் சக்திவேல், மீனாவை வேலையில் இருந்து தூக்கி பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தி அரசியை எப்படியாவது குமரவேலுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். இதுதான் பாண்டியன் மற்றும் மீனா கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என்று நினைக்கிறார். அடுத்ததாக சரவணன் அவருடைய நண்பருடன் சேர்ந்து தங்கமயில் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சாப்பிட போகிறார்.

அங்கே தங்கமயில் வேலை பார்க்கிறார் என்ற விஷயம் சரவணனுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் தங்கமயில் படிக்கவில்லை அதனால் தான் இந்த வேலை பார்க்கிறார் என்று புரியாத சரவணன், தங்கமயில் மீது கோபப்பட்டதோடு இந்த வேலையை விட்டு விடு என்று சொல்லி கூட்டிட்டு போய்விடுவார். அத்துடன் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவும் மாட்டார். தங்கமயில் படிக்கவில்லை என்ற உண்மையும் சரவணனுக்கு தெரியப்போவதில்லை.