ஊரே எங்க இருக்காருன்னு தேடுது.. ரீல்ஸ் போட்டு ஜாலியாக இருக்கும் ஸ்ரீ

Maanagaram Sri : கடந்த சில நாட்களாகவே இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயம் மாநகரம் ஸ்ரீ உடல்நிலை குறித்து தான். நல்ல திறமையான நடிகராக பார்க்கப்பட்ட இவர் இப்போது மோசமான நிலையில் இருந்து வருகிறார்.

ஸ்ரீயின் உறவினர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவர் எங்கே இருக்கிறார் என்று வலை வீசி தேடி வருகின்றனர். ஆனால் அவர் ஜாலியாக ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார். அவரது இந்த நிலைக்கு என்ன காரணம் என்று பல தகவல் வெளியாகி வருகிறது.

ஸ்ரீ இதுவரை ஆறு படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவருடைய குணத்தால் தான் வாய்ப்புகள் தட்டி போவதாக ஒரு செய்தி பரவலாக வந்தது. மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் சம்பளத்தை தாமதமாக கொடுக்கிறார்கள்.

மாநகரம் ஸ்ரீ தற்போதைய நிலைமைக்கு காரணம்

இதனால் தயாரிப்பு தரப்பில் இருந்து ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காததால் தான் இவ்வாறு ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆறு படங்களில் நடித்த ஸ்ரீக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் சம்பள பாக்கி இருந்திருக்க கூடும்.

அதனால் இவ்வாறு மோசமான நிலைக்கு மாறியிருப்பார் என்பது நம்பக்கூடியதாக இல்லை. ஆனால் ஸ்ரீயின் உறவினர் ஒருவர் கூறுகையில் அவருடைய தனிப்பட்ட சில மோசமான குணத்தாலும், வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்சனை ஏற்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவரது உறவினர்கள் கூப்பிட்டாலும் வர மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். ஸ்ரீ இருக்குமிடம் தெரிந்து அவரை நேரடியாக பேட்டி எடுத்தால் தான் அவரைப் பற்றிய உண்மையான நிலை தெரிய வரும்.