ஒரு படம் பெயிலியர் என்றால் சரி, ஆனால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை நம்பி பணம் போட்டு மோசம் போன தயாரிப்பாளர்கள் பல பேர் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். அதில் ஒரு நிறுவனத்தை இப்பொழுது முழுவதுமாக மூடப் போகிறார்கள். சமீபத்தில் பெரிய பட்ஜெட்டில் எடுத்து தயாரிப்பாளர்கள் தலையில் இடியை இறக்கிய 5 படங்கள்.
தங்கலான்: 100 இல்லை 200 சதவீதம் அர்ப்பணிப்போடு விக்ரம் நம்பி மோசமான படம் தான் இது. பா ரஞ்சித் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் விக்ரம்மை வைத்து செய்து விட்டார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து மோசமானது.
கங்குவா: இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்திற்கு பெரிய லெவலில் பில்டப் கொடுத்தார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இந்த படம். பீரியாடிக் பிலிம்மாக வெளிவந்த இந்த படத்தை மக்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
வேட்டையன்: ரஜினி வழக்கத்துக்கு மாறாக ஒரு கன்டன்ட்டை நம்பி மோசம் போன கதை தான் வேட்டையன். ஜெய் பீம் படம் புகழ் இயக்குனர் டி ஜே ஞானவேல். இவரை வான்டட்டாக கூப்பிட்டு ரஜினி கொடுத்த படம் தான் இது. இந்த படத்தை லைக்கா தயாரித்து மோசமானது.
இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மோசமான பிளாப் ஆனது சுமார் 500 கோடிகள் இறக்கி லைக்கா இதனை செதுக்கியது. இருந்தாலும் இந்த படம் கை கொடுக்கவில்லை. லைக்கா நிறுவனத்திற்கு பெரிய அடியாக அமைந்தது.
லால் சலாம்: இந்த படத்தையும் தயாரித்தது லைக்கா நிறுவனம் தான். இதில் ரஜினி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது மகள் ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கினார். இப்படி தொடர்ந்து மூன்று நான்கு படங்களில் நஷ்டம் அடைந்தது லைக்கா. இவர்களைப் போலவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நஷ்டத்தில் இருக்கிறது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தை இப்பொழுது மூட போகிறார்கள்.