Vijay : சிறந்த நடிகரான சத்யராஜ் பெரியார் கொள்கையை பின்பற்ற கூடியவர். அவரது மகன் சிபிராஜ் படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்து இருக்கிறார்.
இவர் ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசுகையில் விஜய்யை விமர்சித்துள்ளார். விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டி போட இருக்கிறார்.
இதை அடுத்து சமீபத்தில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் ஸ்டாலினை எதிர்த்து சரமாரியான கேள்விகளை கேட்டிருந்தார். அதோடு திமுக மற்றும் தவெக இடையே தான் தேர்தல் போட்டி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
விஜய்யை விமர்சிக்கும் சத்யராஜ் மகள்
திமுகவை எதிர்த்து நேரடியாகவே விஜய் பேசியது இணையத்தில் பேசு பொருளாக மாறியது. இந்த சூழலில் திவ்யா சத்யராஜ் அண்மையில் பேசுகையில் பிரண்டு திருமணத்திற்காக ஏசி கேரவனில் அமர்ந்து கொண்டு சொகுசு விமானத்தில் பிரெண்டின் திருமணத்திற்காக செல்லும் போலியான அரசியல்வாதி உதயநிதி கிடையாது.
மக்களுக்கு பிரச்சனை என்றால் மழை, வெள்ளம் என்று பார்க்காமல் களத்தில் இறங்கி செயல்படக் கூடியவர். தமிழ்நாட்டைக் காக்க வந்த மாமன்னன் தான் அவர் என்று உதயநிதியை புகழ்ந்து பேசினார். விஜய்யை த்ரிஷாவுடன் இணைத்து தான் மறைமுகமாக திவ்யா பேசியுள்ளார் என்று சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக திவ்யாவை சாடி வருகிறார்கள். முதலில் மேடைப்பேச்சு எப்படி என்பதை கற்றுக்கொண்டு பேச வாருங்கள். அரசியல் மீது விமர்சனம் வைக்க வேண்டும், அவர் யாருடன் சென்றார் எல்லாம் பேசுவது தவறு என்றும் கூறி வருகிறார்கள்.