Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை யாருக்கும் தெரியாததால் கங்காவை மட்டும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள். அத்துடன் வீட்டு வேலைகள் அனைத்தையும் காவேரி பார்க்கும்படி சூழ்நிலை அமைந்துவிட்டது. அந்த வகையில் காவிரி தண்ணீர் பிடிப்பதற்காக கீழே போகிறார்.
அப்படி காவிரி வேலை செய்வதை பார்த்த நவீன் உதவி பண்ணுவதற்காக கீழே போகிறார். அந்த நேரத்தில் காவிரி மீது அக்கறை காட்டும் விதமாக நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை இப்போதைக்கு விஜய் இடமாவது சொல்லிவிடு. அப்பொழுதுதான் நீ படுகிற கஷ்டத்துக்கு ஒரு விடிவு காலம் வரும். நீ சொல்லாத வரை எல்லா வேலையும் நீ பார்க்கும் படியாக அமைந்து விடும். அது உனக்கும் உன்னுடைய குழந்தைக்கும் சரியாக இருக்காது என்று அக்கறையுடன் சொல்கிறார்.
ஆனால் காவேரி பிடிவாதமாக வெண்ணிலா பிரச்சினையை சரி செய்த பிறகு தான் நான் விஜய் இடம் சொல்வேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே நவீன் ஆனால் எனக்கு உண்மை தெரிந்ததால் நான் உன்னை இப்படியே விட்டு விட முடியாது. அதனால் உனக்கு நான் உதவி பண்ணுகிறேன் என்று சொல்லி தண்ணீர் குடத்தை மாடிக்கு கொண்டுட்டு வருகிறார். ஆனால் இவர்கள் பேசியதை ஒளிந்து இருந்து கேட்ட யமுனா என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் காவிரிக்கு ஏன் நவீன் இப்படி உதவி செய்ய வேண்டும், இவர்கள் இரண்டு பேருக்கும் அப்படி என்ன இருக்கிறது என்று சொல்லி சந்தேகத்துடன் பார்க்கிறார். அத்துடன் வீட்டிற்கு வந்த யமுனா, நவீனிடம் சப்பாத்தி போடுவதற்கு உதவி கேட்கிறார். அதற்கு நவீன் நான் உதவி பண்ணுகிறேன், ஆனால் எனக்கு சப்பாத்தி எப்படி போடுவது என்று தெரியாதே என்று சொல்லிவிட்டார். உடனே யமுனா, தண்ணீர் குடம் மட்டும்தான் உங்களுக்கு தூக்கத் தெரியுமா என்று குதர்க்கமாக பேச ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது நவீனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார். எந்த தவறுமே செய்யாமல் யமுனாவிடம் மாட்டிக் கொண்டு நவீன் அவஸ்தைப்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் கங்கா குமரன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த காவேரி தானும் கர்ப்பம் என்ற விஷயம் விஜய்க்கு தெரிந்தால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு அதிலேயே சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
அடுத்ததாக வீட்டின் ஓனர் விஜய்க்கு கால் பண்ணி பேசிய பொழுது ஒரு குட்டி குழந்தை காவேரி வீட்டிற்கு வரப் போகிறது என்ற உண்மை மட்டும் சொல்கிறார். இதை கேட்டதும் விஜய் காவேரி கர்ப்பம் என்று புரிந்து கொண்டு சந்தோஷத்துடன் துள்ளி குதிக்கிறார். அதே சந்தோஷத்துடன் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்து பேச வேண்டும் என்று விஜய் போகிறார். ஆனால் அப்படி காவிரியை சந்தித்து பேசும் பொழுது காவிரி உண்மையை சொல்வாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.