Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு ஆசைப்பட்ட சுதாகர் இனியாவை வீட்டின் மருமகளாக ஆக்கிக் கொண்டு பாக்யாவின் ரெஸ்டாரண்டை வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டார். இதற்கு சரியான ஆளு கோபியாக தான் இருப்பார் என்று நினைத்த சுதாகர், கோபிக்கு வலை விரித்தார். கோபியும் ஈசியாக அந்த வலையில் சிக்கிக் கொண்டு இனியாவிடம் சென்டிமென்ட் ட்ராமாவை போட்டு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விட்டார்.
இனியாவே சம்மதித்த பிறகு நாம் என்ன பண்ண முடியும் என்ற நினைப்பில் பாக்கியம் கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் சுதாகர், கல்யாணத்துக்கு முன் பாக்யாவை கூப்பிட்டு என்னுடைய ரெஸ்டாரன்ட் இந்த இடத்தில் வைத்தால் தான் சரியாக இருக்கும். அதனால் ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு பதிலாக என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்லி கேட்டார்.
ஆரம்பத்தில் பாக்கியம் யோசித்தாலும் மகளின் வாழ்க்கையை எண்ணி சரி என்று சம்மதித்து விட்டார். அத்துடன் கல்யாணத்திற்கு முதல் நாள் பாக்கியவிடம் பத்திரத்தில் கையெழுத்து கேட்டார். பாக்யாவும் கையெழுத்து போட தயாராகிய நிலையில் அந்த பத்திரத்தில் எதுவும் எழுதப்படாமல் வெறும் கையெழுத்து மட்டும் கேட்கப்பட்டிருந்தது. இதனால் பாக்கியம் யோசித்து நிலையில் ஈஸ்வரி பாக்யாவிற்கு பிரஷர் கொடுத்து கையெழுத்து போட வைத்து விட்டார்.
உடனே இனியா மற்றும் சுதாகரின் பையனுக்கும் கல்யாணம் நடந்து விட்டது. அடுத்தபடியாக வழக்கம் போல் பாக்கிய அவருடைய ரெஸ்டாரண்டுக்கு போன பொழுது சுதாகர் அங்கு வந்து இனி இது என்னுடைய ரெஸ்டாரன்ட் உங்களுக்கு வேலை இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். இந்த ஏமாற்றத்தை நம்ப முடியாத பாக்கியம் வீட்டிற்கு போய் சுதாகர் செய்த அட்டூழியத்தை கோபி மற்றும் ஈஸ்வரிடம் சொல்கிறார்.
ஆனாலும் இனி எதுவும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப பாக்கியா சுதாகரிடம் ஏமாந்து போய்விட்டார். இதற்கு ஒரு காரணம் சுதாகர் ஆக இருந்தாலும் கோபி மற்றும் ஈஸ்வரியின் தூண்டுதலால் பாக்யாவின் கனவு எல்லாம் வீணாகிவிட்டது. அத்துடன் இனியாவின் வாழ்க்கையும் பகடகாயாக வைத்து சுதாகர் விளையாடிவிட்டார்.