குட் பேட் அக்லியால் லைன் அப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள்.. அஜித் காட்டில் பேயும் பண மழை

Ajith: அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி கலெக்ஷனை அள்ளி இருக்கிறது. அடுத்ததாக அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஒருபுறம் கார் ரேஸில் அஜித் இறங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் அஜித்தின் படத்தை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் ஜனநாயகனுடன் விஜய்யின் சினிமா கேரியர் முடிவுக்கு வருகிறது.

இதனால் சினிமாவில் பெரும் ரசிகர்கள் உள்ள இரண்டு நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தான். ஆகையால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அஜித்தை நாடி வருகிறார்கள். வெங்கி அட்லூரி அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம்.

அஜித்தை நாடிவரும் முன்னணி தயாரிப்பாளர்கள்

அந்த கதை பிடித்துள்ளதால் அஜித் அடுத்ததாக அந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவிஸ் தான் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் அவரது சம்பளம் 175 கோடி என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களாக பார்க்கப்படும் ரெட் ஜெயன்ட், டான் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் என்டர்டைன்மென்ட் அஜித் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர்.

அஜித்தும் இப்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்ட வருகிறாராம். ஆகையால் இனி வருசத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வருஷத்துக்கு ஒன்று என்று அஜித் படம் வெளியான நிலைபோகி வருஷத்துக்கு மூன்று நான்கு படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.