இயக்குனர் அவதாரம் எடுத்த 7 டான்ஸர்கள்.. விஜய்க்கு ஹிட் கொடுத்த பிரபுதேவா

Prabhu Deva : ஆரம்ப காலங்களில் நடன இயக்குனர்களாக இருந்து அதன் பிறகு படங்களை இயக்கிய 7 இயக்குனர்களை பார்க்கலாம்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணா. இவர் தற்போது கவின் நடிப்பில் உருவாகி வரும் கிஸ் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது வனிதா தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகி வரும் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை ராபர்ட் இயக்கி வருகிறார்.

மிகச்சிறந்த நடன மாஸ்டர் தான் ராகவா லாரன்ஸ். இவர் கதாநாயகனாகவும் நடித்து வரும் நிலையில் முனி, காஞ்சனா போன்ற சில படங்களை இயக்கியும் வெற்றி கண்டிருக்கிறார்.

இயக்குனர் அவதாரம் எடுத்த நடன இயக்குனர்கள்

கலா மாஸ்டரின் தங்கையான பிருந்தா மாஸ்டரும் நடன இயக்குனர் தான். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

பிரபலமான நடன இயக்குனரான பிரபுதேவா கதாநாயகனாக பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவர் விஜய்யின் போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் படத்தையும் பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபுதேவாவின் சகோதரர்தான் ராஜூ சுந்தரம். இவரும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படத்தை இவர் தான் இயக்கி இருந்தார்.

நடன இயக்குனரான பாபா பாஸ்கர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து குப்பத்து ராஜா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வந்த சுவடே தெரியவில்லை.